பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 - பெரிய புராண விளக்கம்-5

ஒருமை பன்மை மயக்கம்.வண்டொடு-வண்டுகளோடு; ஒருமை பன்மை மயக்கம், சூழ்ந்து-சுற்றிவந்து. முரன்றிட-ரீங்காரம் செய்ய விரும்பு-யாவரும் விருப்பத்தை அடையும், மென்-- மென்மையான. கண்-கனுக்களை ஒருமை பன்மை மயக்கம். உடையவாய்-பெற்றவையாகி. விட்டு-இவைகளைப் பரவ: விட்டு. நீள்-உயரமாக வளரும். கரும்பு-கரும்புச் செடிகள்: ஒருமை பன்மை மயக்கம். தேன் சொரியும்-தேனைப் பொழி யும். கணமங்கலம்-கணமங்கலம் என்பது.

பிறகு வரும் 2-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: சம்பா நெற் பயிர்கள் நிரம்பி வளரும் வயல்களில் களை களாக எடுத்து எறிந்த செந்தாமரை மலர்களைத் தங்க ளுக்கு முன்னால் சங்குப் பூச்சிகள் உமிழும் முத்துக்களைப் பொழிய அந்த வயல்களில் பணி புரிய வந்திருக்கும் உழவர் கள் தங்களுடைய கைகளின் மேல் எடுத்துக் கொண்டு காட்சி அளிப்பார்கள்; அவர்கள் நிலை பெற்று விளங்கும் பதுமநிதி: யைப்போல இருப்பார்கள். பாடல் வருமாறு:

செந்நெல் ஆர்வயல் கட்டசெந் தாமரை முன்னர் கந்துமிழ் முத்தம் சொரிந்திடத் துன்னு மள்ளர்கைம் மேற்கொண்டு தோன்றுவார் மன்னு பங்கய மாநிதி போன்றுளார்.' 勒 செந்நெல்-சம்பா நெற்பயிர்கள்; ஒருமை பன்மை மயக் கம். ஆர்-நிரம்பி வளரும். வயல்-வயல்களில்; ஒருமை. பன்மை மயக்கம். கட்ட-களைகளாகப் பறித்து எறிந்த. செந்தாமரை-செந்தாமரை மலர்களை ஒருமை பன்மை: மயக்கம். முன்னர்-தங்களுக்கு முன்னால். நந்து:சங்குப்பூச்சி கள் ஒருமை பன்மை மயக்கம். உமிழ்-உமிழும்.முத்தம்-முத். துக்களை ஒருமை பன்மை மயக்கம். சொரிந்திட-பொழிய. த் : சந்தி. துன்னு-அந்த வயல்களில் பணிபுரிய வந்திருக்கும். மள்ளர்-உழவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். கைம்மேல்தங்களுடைய கைகளின் மேல். கை: ஒருமை பன்மை மயக் கம். கொண்டு-எடுத்துக் கொண்டு. தோன்றுவார்-காட்சி: