பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிவாட்டாய நாயனார் புராணம் 7

அளிப்பார்கள்: ஒருமை பன்மை மயக்கம். மன்னு-நிலை பெற்று விளங்கும். பங்கயமாநிதி-பெருமையைப் பெற்ற பதுமநிதியை. சங்கநிதி, பதும நிதி என்ற இரண்டும் குபேர னிடத்தில் உள்ளவை. போன்று-போல. உளார்-அந்த உழவர் கள் இருப்பார்கள்; ஒருமை பன்மை மயக்கம்; இடைக்குறை.

பிறகு வரும் 3-ஆம் பாடலின் கருத்து வருமாறு: . . . 'நீர் வளம், நில வளம், செல்வ வளம், நன்மக்கள் வளம் முதலிய வளங்களோடு நெடுங்காலமாக விளங்கும் ஊராகிய அந்தக் கணமங்கலத்தில் வண்டுகள் ரிங்கார்ம் செய்யும் கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள் என்னும் ஐந்து பகுதிகளைப் பெற்ற கூந்தல்களை உடையவர்களாகிய பெண்களினுடைய முகங்களிலும், கழுத்துக்களின் மேலும் கயல் மீன்கள் துள்ளிப் பாயும் வயல்களுக்குப் பக்கத்தில் உள்ள குளங்களில் நீளமாக இருக்கும் தழைகளைப் பெற்ற நீலோற்பல மலர்கள் இருக்கும். பாடல் வருமாறு: ' வளத்தில் நீடும் பதிஅதன் கண்வரி

உளர்த்தும் ஐம்பால் உடையோர் முகத்தினும் களத்தின் மீதும் கயல்பாய் வயலயல் குளத்தும் நீளும் குழையுடை லேங்கள்." வளத்தில்-நீர்வளம், நிலவளம், செல்வவளம், நன்மக் கள் வளம் முதலிய வளங்களோடு; ஒருமை பன்மை மயக்கம்; உருபு மயக்கம். நீடும்-நெடுங்காலமாக விளங்கும். பதி-ஊரா கிய. அதன் கண்-அந்தக் கணமங்கலத்தில். வரி-வண்டுகள்: ஒருமை பன்மை மயக்கம். உளர்த்தும்-gங்காரம் செய்யும், ஐம்பால்-கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள் என்னும் ஐந்து பகுதிகளைப் பெற்ற கூந்தல்களை ஒருமை பன்மை மயக்கம். பால்: ஒருமை பன்மை மயக்கம். உடையோர்உடையவர்களாகிய பெண்மணிகளினுடைய ஒருமைபன்மை . மயக்கம். முகத்திலும்-வதனங்களிலும்; ஒருமைபன்மை மயக் கம். களத்தின்-கழுத்துக்களின்; ஒருமை பன்மை மயக்கம். மீதும்.மேலும். கயல்-கயல் மீன்கள்:ஒருமை பன்மை மயக்கம்,