பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்த்தி நாயனார் புராணம் 113

ஆளுபவராகிய நடராஜப் பெருமானார் அணிந்து கொள்ளும் நல்ல அழகிய திருமேனியில் பூசும் சந்தனம் இன்றைக்குக் கிடைக்காமல் போகும் இயல்பு உண்டானாலும் தேய்க்கும் அடியேனுடைய கை தவறாது என்று எண்ணி வட்டமாக விளங்கும் ஒரு கருங்கற் பாறையின் மேல் வைத்து மணிக் கட்டுகளும், வெளித் தோலும், நரம்புகளும், எலும்புகளும் கரைந்து தேயுமாறு தம்முடையமுழங்கையைத் தேய்த்தார்." பாடல் வருமாறு: -

' கட்டம்புரி வார் அணி கற்றிரு மெய்ப்பூச் சின்று

முட்டும்பரி சாயினும் தேய்க்கும்கை முட்டா தென்று வட்டம் திகழ் பாறையின் வைத்து முழங்கை தேயத்தார் கட்டும்புறக் தோல்கரம் பென்டி கரைந்து தேய.'

நட்டம்-அந்த மூர்த்தி நாயனார் சிதம்பரத்தில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் திருநடனம். புரிவார்-புரிந்தருளுபவ ராகிய நடராஜப் பெருமானார். அணி-அணிந்து கொ ள்ளும். நல்-நல்ல. திரு அழகிய மெய்-தம்முடைய திருமேனியிது . ப்:சந்தி. பூச்சு-பூசிக் கொள்ளும் சந்தனம். இன்று.இன் றைக்கு. முட்டும்-கிடைக்காமல் போகும். பரிசு-இயல்பு. ஆயினும் உண்டானாலும், தேய்க்கும் கை-.ே த ப் க் கு ம் அடியேனுடைய கை. முட்டாது-தவறாது.என்று-எனஎண்ணி, வட்டம்-வட்டமாக. திகழ்-விளங்கும். பாறையின்-ஒரு சுருங்கற் பாறையின் மேல். வைத்துக் கட்டும்-வைத்து மணிக் கட்டுகளும்; ஒருமை பன்மை மயக்கம். புறம்தோல்-வெளித் தோலும், நரம்பு-நரம்புகளும்; ஒருமை பன்மை மயக்கம். என்பு-எலும்புகளும்; ஒருமை பன்மை மயக்கம். கரைந்து தேய-கரைந்து தேயுமாறு. முழங்கை தேய்த்தார்-தம்முடைய

முழங்கையைத் தேய்த்தார்.

பிறகு வரும் 21-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

அவ்வாறு அந்த மூர்த்தி நாயனார் கருங்கற் பாறையின் மேல் வைத்துத் தேய்த்த அவருடைய முழங்கையிலிருந்து இரத்தம் வழிந்து போகும் பரந்த இடம் எங்கும் எலும்புகள்