பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பெரிய புராண விளக்கம்-5

வெளிப்பட்டு மூளை சேரும் விதத்தைப் பார்த்து அவருடைய தலைவராகிய நடராஜப் பெருமானார் பொறுக்கவில்லை;. அந்த இரவில் மகிழ்ச்சியை அடைந்து அந்தப் பெருமானார் திருவாய் மலர்ந்தருளிச் செய்த ஒர் அசரீரி வாக்கு எழுந்து: கேட்டது. பாடல் வருமாறு: . . .

கல்லின்புறம் தேய்த்த முழங்கை கலுழ்ந்து சோரி செல்லும்பரப் பெங்கனும் என்பு திறந்த மூளை புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பி ரானார்: + அல்லின்கண் எழுந்த துவந்தருள் செய்த வாக்கு." கல்லின்-அவ்வாறு அந்த மூர்த்தி நாயனார் கருங்கற். பாறையின். புறம்-மேல். தேய்த்த-வைத்துத் தேய்த்த. முழங்கை-அவருடைய முழங்கையிலிருந்து. சோரி-இரத்தம். செல்லும்-வழிந்து ஒடும். பரப்பு-பரந்த இடம். எங்கணும். எங்கும். என்பு:எலும்புகள்; ஒருமை பன்மை மயக்கம். திறந்த மூளை-வெளிப்பட்ட மூளை. புல்லும்-சேரும். படிவிதத்தை. கண்டு-பார்த்தருளி. தம்-அவருடைய. பிரானார்தலைவராகிய நடராஜப் பெருமானார். பொறுத்திலர்பொறுக்கவில்லை.அல்லின் கண்-அந்த இராத்திரி வேளையில். உவந்து-மகிழ்ச்சியை அடைந்து அருள் செய்த-அந்தப் பெரு, மானாச் திருவாய் மலர்ந்தருளிச் செய்த வாக்கு-ஒர் அசரீரி, வாக்கு. எழுந்தது எழுந்து கேட்டது.

பிறகு உள்ள 22-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

எம்மிடம் கொண்ட பக்தியின் துணிவினால் இந்தக்க காரியத்தைப் புரியாதே; ஐயனே, நின்னிடம் வலிமையான துன்பங்களை உண்டாகும்படி செய்தவனாகிய அந்த மன்னன்" கவர்ந்து கொண்ட நாடு முழுவதையும் நீ பெற்றுக் கொண்டு. முன்பு துன்பங்கள் உண்டானவை முழுவதையும் போக்கி விட்டு நாட்டை அரசாட்சி செய்து பாதுகாத்துப் பிறகு நின்னுடைய திருட்பணிகளைப் புரிந்து விட்டுப் பிறகு, நம்முடைய பெருமையைப் பெற்ற சிவலோகத்தை அடை.