பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பெரிய புராண விளக்கம்-5

' செம்மாண்வினை அர்ச்சனை நூல்முறை செய்து, -

தோளால்:

இம்மாநிலம் ஏந்தஓர் ஏந்தலை ஏந்து கென்று.

பெய்ம்மாமுகில் போல்மதம் பாய்பெரு கோடை நெற்றிக்

கைம்மாவை நறுந்துகில் கொண்டு கண்கட்டி விட்டார்.'

செம்-செம்மையும். மாண்-மாட்சியும் கொண்ட, வினை-செயலாகிய, அர்ச்சனை-அருச்சனையை. நூல் முறை-சாத்திர முறைப்படி. செய்து-புரிந்து. தோளால்தன்னுடைய தோள்களின் வவிமையினால், ஒருமை பன்மை: மயக்கம்; ஆகு பெயர். இம்மா-இந்தப் பெரிய நிலம்நாட்டை, ஏந்த-பாதுகாத்துத் தாங்குவதற்கு. ஒர் ஏந்தலை -உரிய ஒரு மன்னனை. ஏந்துக-நீ உன்மேல் எடுத்துக் கொண்டு வருவாயாக. என்று-எனக் கூறி, ஏந்து சென்று: தொகுத்தல் விகாரம். பெய்-மழையைப் பெய்யும். ம்:சந்தி. மா-பெரிய. முகில் போல்-மேகத்தைப் போல, மதம்கன்ன மதம், கபோல மதம், பிஜ மதம் என்னும் மூன்று மதங்: களையும்; ஒருமை பன்மை மயக்கம். பாய்-ஒழுக விடும். பெருகு-ஒளியைப் பெருக வீசும். ஒடை-பட்டத்தை. அணிந்த நெற்றி-நெற்றியையும். க்:சந்தி. கை-துதிக்கை. யையும் பெற்ற, ம்:சந்தி. மாவை-விலங்காகிய யானையை. நறும்-நறுமணம் கமழும். துகில் கொண்டு-ஒரு மெல்லிய ஆடையைக் கொண்டு. கண்-அந்த யானையினுடைய கண்களை ஒருமை பன்மை மயக்கம். கட்டி-கட்டி விட்டு. விட்டார்-அந்த மந்திரிகள் அனுப்பினார்கள்; ஒருமை. பன்மை மயக்கம். - -

பிறகு வரும் 32-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அவ்வாறு மந்திரிகள் தன்னுடைய கண்களைக் கட்டி விட்டு அனுப்பும் மதத்தால் களிப்பை அடைந்த, அந்த வேழம் அந்தப் பாதுகாப்பைப் பெற்ற பழைய ஊரில் தரை சுழலுமாறு ஒரு தெருவின் பக்கத்தில் திரிந்து: ஒடி உறுதியான தங்கத்தைப் பதித்திருக்கும் விசாலமான