பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்த்தி நாயனார் புராணம் - 125;

பெரிய திருமதில் சுற்றியிருக்கும் மதுரை மாநகரத்தில் விளங் கும் ஆலயமாகிய திருவாலவாயிலில் ஆகாயம் தாழ்ந்து நிற்க. ஓங்கி விளங்கும் கோபுர வாசலுக்கு முன்னால் சென்று." பாடல் வருமாறு: .

' கண்கட்டி விடும்களி யானைஅக் காவல் மூதூர் மண்கொட் புறவீதி மருங்கு திரிந்து போகித் திண்பொற்றட மாமதில் சூழ்திருவால வாயின் விண்பிற்பட ஓங்கிய கோபுரம் முன்பு:மேவி.’’ இந்தப் பாடல் குளகம். கண்-அவ்வாறு மந்திரிகள் தன் லுடைய கண்களை ஒருமை பன்மை மயக்கம். கட்டி-ஒரு. மெல்லிய ஆடையினால் கட்டி விட்டு. விடும் அனுப்பும்' களி-மதத்தால் களிப்பை அடைந்த, யானை-அந்த வேழம். அக் காவல்-அந்தப் பாதுகாப்பைப் பெற்ற மூதூர்-பழைய ஊராகிய மதுரை மாநகரத்தில். மண்-தரை. கொட்புறசுழலுமாறு. வீதி-ஒரு தெருவின். மருங்கு-பக்கத்தில்.திரிந்துதிரும்பி. போகி-ஓடி. த்:சந்தி. திண்-உறுதியான. பொன்தங்கத்தைப் பதித்திருக்கும். தட-விசாலமாகிய. மா-பெரிய, மதில்-திருமதில். சூழ்-சுற்றியிருக்கும். திருவால வாயின்மதுரை மாநகரத்தில் விளங்கும் ஆலயமாகிய திருவால வாயி லில், விண்-ஆகாயம். பிற்பட-தாழ்ந்து நிற்க ஓங்கிய-உயர மாக விளங்கிய, கோபுரம்-கோபுர வாசலுக்கு. முன்பு-முன் னால். மேவி-சென்று. - - பிறகு வரும் 33-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "அந்த யானை ஒடும் இராத்திரி வேளையில் நடந்த, தைப் பார்த்த திருத்தொண்டராகிய மூர்த்தி நாயனார், "இந்த இடத்தில் எம்பெருமானாகிய சோமசுந்தரக் கடவுள் வழங்கிய திருவருள் ஆகும் என்று கூறினால் இந்த உலகத் தில் வாழும் மக்களை அரசாட்சி புரிந்து பாதுகாக்கும். பணியை அடியேன் ஏற்றுக் கொள்வேன்' எனத் தம்முடைய திருவுள்ளத்தில் தளர்ச்சியை விட்டுவிட்டு, கொன்றை மலர் மாலையை அணிந்தவராகிய சோமசுந்தரப் பெருமானார்.