பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருக நாயனார் புராணம் 153

பைப் பெற்றவராகி இடப வாகனத்தின் மேல் ஏறிக் கொண்டு எழுந்தருளுபவராகிய நடராஜப் பெருமானாருக்கு ஆளாக அமைந்த உண்மையான தவத்தின் பயனால் அந்தப் பெரு மானாருடைய தொகுதியாக உள்ள சடாபாரத்தின் மீது அணிவதற்காகத் திருப்பள்ளித்தாமம் என்னும் மாலைக்கு உரிய மலர்களைக் கொய்து கொண்டு வந்து அந்தப் பெரு மானாருக்கு அணிவார் அந்த முருக நாயனார். பாடல் வருமாறு:

அடைமேல் அலவன் துயிலுணர அலர்செங் கமலவயற்

கயல்கள் மடைமேல் உகளும் திருப்புகலூர் மன்னி வாழும்

தன்மையராய் விடைமேல் வருவார்க் காளான மெய்ம்மைத் தவத்தால்

- . அவர்கற்றைச் சடைமேல் அணியத் திருப்பள்ளித் தாமம் பறித்துச் .

சாத்துவார். அடைமேல்-நீர்நிலைகளில் உள்ள நீரில் வளர்ந்துள்ள தாமரைக் கொடியினுடைய இலையின் மேல். அலவன்-நண்டு. துயில்-துயில் புரிந்து. உணர-பிறகு விழிக்குமாறு. அலர்மலரும். செங்கமல-செந்தாமரை மலர்கள் மலர்ந்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். வயல்-வயல்களில் வாழும்; ஒருமை பன்மை மயக்கம், கயல்கள்.கயல் மீன்கள். மடைமேல்-வய லுக்கு நீர் பாயும் வழியாகிய மடைகளின் மேல்; ஒருமை பன்மை மயக்கம். உசளும்-துள்ளிக்குதிக்கும். திருப்புகலூர்திருப்புகலூரில். மன்னி-நிலை பெற்று. வாழும்-தம்முடைய வாழ்க்கையை நடத்தும். தன்மையராய்-இயல்பைப் பெற்ற வராகி. விடைமேல்-இடப வாகனத்தின்மேல் ஏறிக் கொண்டு. வருவார்க்கு-எழுந்தருளுபவராகிய நடராஜப் பெருமானா ருக்கு. ஆளான-ஆளாக அமைந்த. மெய்ம்மை-உண்மை யானத்: சந்தி. தவத்தால்-முன் பிறவியில் புரிந்த தவத்தின் பயனால்; ஆகு பெயர். அவர்-அந்தப் பெருமானாருடைய,