பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i54 பெரிய புராண விளக்கம்-5

கற்றை-தொகுதியாக உள்ள ச்:சந்தி. சடைமேல்-சடா பாரத்தின் மீது அணிய-புனைந்து கொள்வதற்காக, த்:சந்தி. திருப்பள்ளித் தாமம்-திருப்பள்ளி எழுச்சியின் போது அணி வதற்குரிய மலர் மாலையில் கட்டுகின்ற மலர்களை; ஆகு பெயர். பறித்து-கொய்து கொண்டு வந்து. ச்:சந்தி. சாத்து வார்-அந்தப் பெருமானாருக்கு அணிவார் அந்த முருக இாயனார். - அடுத்து வரும் 7-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'இராத்திரி விடியும் விடியல் வேளைக்கு முன்னாலேயே துயிலிலிருந்து விழித்து எழுந்து சென்று தூய்மையான நீரில் முழுகி விட்டுச் சென்று மலர்ந்து விளங்கும் பக்குவத்தை உடைய தம்முடைய தலைவனாகிய கோணப் பிரானுடைய திருமுடியின் மீது ஆகாய கங்கையாகிய நீர் நிரம்பிய ஆறும், பிறைச் சந்திரனும் தங்கியிருக்கும் பக்கத்தில் நறுமணத்தை வெளிப்படுத்துமாறு அரும்புகின்ற பக்குவத்தில் அந்த மலர் களைத் தம்மோடு கொய்து கொண்டுவந்த கணக்கு இல்லாத மலர்களை அந்த முருக நாயனார் வேறு வேறாக அழகிய மலர்க் கூடைகளில் வைப்பார். பாடல் வருமாறு:

புலரும் பொழுதின் முன்எழுந்து புனித நீரில் மூழ்கிப்போய் மலரும் செவ்வித் தம்பெருமான் முடிமேல் வான்ர்ே

- ஆறுமதி உலவு மருங்கு முருகுயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன்

பறித்த அலகில் மலர்கள் வெவ்வேறு திருப்பூங் கூடை - களிலமைப்பார்." புலரும்-இராத்திரி விடியும். பொழுதின்-விடியல் வேளைக்கு. முன்-முன்னாலேயே எழுந்து-துயிலிலிருந்து விழித்து எழுந்து. புனித-தூய்மையான. நீரில்-புனலில். மூழ்கி-முழுகி விட்டு. ப்:சந்தி, போய்-சென்று. மலரும்மலர்ந்து விளங்கும். செவ்வி-பக்குவத்தை உடைய, த்: சந்தி. தம்-தம்முடைய. பெருமான்-தலைவனாகிய அக்கினீசுவர