பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருக நாயனார் புராணம் 155

ருடைய முடிமேல்-திருமுடியின் மீது. வான்-ஆகாய நீர் ஆறு-கங்கையாற்றின் நீரும். மதி-பிறைச் சந்திரனும் . உலவு-தங்கி விளங்கும். மருங்கு-பக்கத்தில். முருகு-நறு மணத்தை. உயிர்க்க-வெளிப்படுத் த. நகைக்கும்-அரும்பும். பதத்தின்-பக்குவத்தில். உடன்-அந்த மலர்களைத் தம்மோடு, பறித்த-கொய்து கொண்டு வந்திருந்த, அலகுகணக்கு. இல்-இல்லாத, கடைக்குறை. மலர்கள்-மலர்களை, வெவ்வேறு-வேறு வேறாக. திரு.அழகிய, ப்: சந்தி. பூங் கூடைகளில்-மலர்களை வைக்கும் கூடைகளில். பூ: ஒருமை பன்மை மயக்கம், அமைப்பார்-அந்த முருக நாயனார் அமைத்து வைப்பார். - பிறகு வரும் 8- ஆம் பாடலின் கருத்து வருமாறு:

மரங்களின் கிளைகளில் மலர்ந்த மலர்களையும், தரை யில் வளர்ந்து நிற்கும் செடிகளிலும் கொடிகளிலும் மலர்ந் திருக்கும் மலர்களையும், குளிர்ச்சியான குளம், பொய்கை, தடாகம் முதலியவற்றில் மலர்ந்த செந்தாமரை மலர், வெண்டாமரை மலர், குமுத மலர், செங்கழுநீர் மலர், நீலோற்பல மலர். முதலிய மலர் களையும், கொழுமையான கொடிகளில் பல இதழ்களை உடையவையாகி மலர்ந்த முல்லை மலர், மல்லிகை மலர், இருவாட்சி மலர் முதலிய மலர்களையும், மாமரத்தில் மலர்ந்த மலர்களையும் வேதங் களை வெளிப்படுத்தும் அழகிய அக்கினிசுவரருடைய வாயைப்போல, காட்டில் மலர்ந்த முல்லை மலர்கள் நிலவைப் போல மலர்ந்து விளங்க பொன்மலையாகிய மேரு மலை யாகிய வில்லில் பாம்பாகிய நாணைப் பூட்டி எய்யும் ஒப் பற்றவராகிய அக்கினிசுவரருடைய அழகிய திருமுடிமேல் அணிவதற்கு உரியவை ஆகும் மலர்களை ஆராய்ந்து.' :பாடல் வருமாறு: - - -

கோட்டு மலரும் நிலமலரும் குளிர்நீர் மலரும்

- - கொழுங்கொடியின் தோட்டு மலரும் மாமலரும் சுருதி மலரும் திருவாயில்