பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் நாயனார் புராணம்

பெரிய புராணத்தில் 4-ஆவதாக விளங்கும் மும்மையால் உலகாண்ட சருக்கத்தில் 4-ஆவதாக அமைந்திருப்பது திரு நாளைப் போவார் நாயனார் புராணம். அதில் வரும் முதற் பாடலின் கருத்து வருமாறு:

இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்கள் பாராட்டிக் கீர்த் தியை வாழ்த்தும் பழமையானதும், நீர் வளம், நில வளம், செல்வ வளம், நன்மக்கள் வளம் முதலிய வளங்களைப் பெற். றதும் ஆகிய சிவத்தலமாகும் விளங்கிய நீர் ஒடும் கொள்ளிட ஆறு தன்னுடைய அலைகளாகிய கைகளால் தங்கத்தையும் செழுமையைப் பெற்ற மாணிக்கங்களையும் மொண்டு வந்து வழங்க அந்த ஆற்றினுடைய இரண்டு கரைகளின் பக்கங்களி லும் செந்தாமரை மலராகிய கையால் ஏற்றுக் கொள்ளும் அகலமாக உள்ள வயல்களைப் பெற்ற நல்ல சோழ நாட்டில் மேற்கானாடு என்னும் உள் நாட்டில் விளங்குவது ஆதனுரர் ஆகும்." பாடல் வருமாறு:

' பகர்ந்துலகு சீர்போற்றும் பழையவளம் பதியாகும்

திகழ்ந்தபுனற் கொள்ளிடம்பொன் செழுமனிகள்

திரைக்கரத்தால்