பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 249

பல்பெரும்புனம் பயில்வன படர்சிறைத் தோகை: சொல்லும் அப்புனம் காப்பவும் சுரிகுழல் தோகை.' மல்கும்-இத்தகைய செயல்கள் மிகுதியாக விளங்கும். அப்பெரு-அந்தப் பெரிய, நிலங்களில்-குறிஞ்சி நிலம், முல்லை நிலம், மருத நிலம், நெய்தல் நிலம் என்னும் நான்கு நிலங்க ளுக்குள் வரை-மலைகளை ஒருமை பன்மை மயக்க ம் புணர்-சார்ந்த, குறிஞ்சி-குறிஞ்சி நிலங்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். எல்லை-எல்லையில் உள்ள. எங்கனும்எல்லா இடங்களிலும், ஒருமை பன்மை மயக்கம். கணும்: இடைக்குறை. இறவுளர்-வேடர்கள்; ஒருமை பன்மை மயக் கம். ஏனல்-தினைக் கொல்லைகளுக்கு; ஒருமை பன்மை மயக் கம். முன்-முன்னால். விளைக்கும்-பயிர் செய்து விளையச் செய்யும். பல்-பலவாகிய, பெரும்-பெரியவையாக விளங்கும். புனம்-தினைக் கொல்லைகளில்; ஒருமை பன்மை மயக்கம். பயில்வன-நடந்து பழகுபவை. படர்-விரிவாக் உள் ள متجه சி ைற - சி ற கு க ைள ப் ெப ற் ற : ஒரு ைம பன்மை மயக்கம். த்:சந்தி, தோகை-மயில்கள்: ஒருமை பன்மை மயக்கம். சொல்லும்-புகழ்ந்து பாராட்டும். அப்புனம் அந்தத் தினைக் கொல்லைகளில் ஒருமை பன்மை மயக்கம். காப்பவும்-பரண்களின்மேல் அமர்ந்து கிளி,மான் முதலியவை வந்து தினைகளைத் தின்னாதவாறு பாதுகாப்பவர்களும்: திணை மயக்கம். சுரி-நெளிகளைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். குழல்-கூந்தல்களைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். தோகை-மயில்களைப் போன்ற வேடர் குலப்பெண் மணிகள் உவம ஆகு. பெயர். தோகை: ஒருமை பன்மை மயக்கம், - ... . *

பெண்மணிகளுக்கு மயில் உவமை: 'மயிலார் சாயல் மாதோர் பாகமா', 'மயிலுறு சாயல் வனமுலை ஒருபால் மகிழ்பவர்., 'மயிலும்... போல் மாதர்.', வருநில மயிலன மடநடை மலைமகள்.”, மடமயிலைக் கட்டிட்டம்