பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் - 265

சிப் படலம், 9, 15), மானின் நோக்கியர். (நீர் விளையாட் டுப் படலம், 32), மானுடை நோக்கினார்.', 'மானமர் நோக்கியோர் மதுகை வேந்தன் பால்.’ (உண்டாட்டுப் படலம், 7, 26), மானணி நோக்கினார்.", உழை குலாம் நயனத்தார்.’’ (கோலம் காண் படலம், 7, 20), மானின் விழி பெற்று மயில் வந்ததென வந்தார்.' (சூர்ப்பனகைப் படலம், 33), நவ்விநோக்கியர் இதழ்நிகர் குமுதத்து நறுந் தேன்." (பம்பா நதிப் படலம், 17), செவ்வுழை நெடுங் கணவன்.' (பிலம் நீங்கு படலம், 55), 'உழைத் தடங்கணி.” (சம்பாதிப் படலம், 1), 'ஏழைக்குல் நோக்கினார்கள்.", 'மானார் கண் இள மடவாராயினர்.' (அட்சகுமாரன் வதைப்படலம், 14, 40) என்று கம்பரும் பாடியவற்றைபும், "மானை நேர்விழி மங்கையர். (வரை எடுத்த படலம், 29} என்று உத்தர காண்டத்தில் வருவதையும் காண்க.

பிறகு உள்ள 19-ஆம் பாடலின் கருத்து வருமாறு: விபூதியைப் பூசிக் கொண்ட திருமேனியைப் பெற்றவ ராகிய உமாபதீசுவர்ருடைய பிறைச்சந்திரன் விளங்கும் திரு. முடியின் மீது ஒப்பு இல்லாத கங்கையாற்றில் ஒடும் நீர் அந்த ஈசுவரருக்குத் திருமஞ்சனத்தை வழங்குவதற்காக வந்து சேர்ந்து ஊறும் புனலை அளிக்கும் ஒளியை வீசும் மலர்கள் மலர்ந்த மரங்கள் வளர்ந்து ஓங்கி நிற்கும் கலிகை மாநகரா கிய திருஊறல் என்னும் சிவத்தலத்தை வேறாகத் தன்னு டைய பெருமையைப் பெற்ற திருப்பதி என்று அந்தத் தொண்டை நாட்டில் உள்ள பெருமையைக் கொண்ட முல்லை நிலமாகிய காடு திகழும். பாடல் வருமாறு:

றுே சேர்திரு மேனியர் நிலாத்திகழ் முடிமேல் ... - மாறில் கங்கைதான் அவர்க்குமஞ் சனம்தர அண்ைந்தே ஊறு நீர்தரும் ஒளிமலர்க் கலிகைமா நகரை வேறு தன்பெரு வைப்பென விளங்கும் மாமுல்லை.” நீறு-விபூதியை சேர்-பூசிக் கொண்ட. திருமேனியர்.