பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 பெரிய புராண் விளக்கம்-5.

நதிப் படலம், 15), 'மீனின்ற் கண்ணினாள்தன் ம்ென் மொழிக்குவமை வேண்டின் தேனொன்றோ.” (நாடவிட்ட படலம், 13), 'தேனென்ப தறிந்த சொல்லாய். (நிந்த னைப் பட லம், 67), தேன் நகு மழலை இ ன் சொல் உருப்பசி, (சளியாட்டுப் படலம், 37) என்று கம்பர் பாடிய வற்றையும், தேனார்மொழி மடவாள்." (திக்கு விசயப் படலம், 18), தேனனைய இன்சொல் மிடமங்கையர்.: (அசுவமேத யாகப் படலம், 51) என்று உத்தர கா ண்டத்தில் வருவனவற்றையும் காண்க.

பிறகு வரும் 39-ஆம் பாடலின் கருத்து வருமாறு: மயக்கத்தையும் கொடுமையான தொழில்களையும் புரி யும் வேந்தன் வாங்கிய வரியை நெருங்கச் செய்து முன்பு திரு. வொற்றியூர் மட்டும் விட்டுவிட என்று வரையும் ஒப்பற்றவ. ராகிய மாணிக்கத்தியாகர் எழுந்தருளியிருக்கும் பெருமை. யைப் பெற்ற ஆலயத்தினுடைய ஒரு பக்கத்தில் சுற்றி. யிருந்த அழகிய பரவலாகிய இடங்களையும் பெற்றது. அந்த அலைகள் வீசும் சமுத்திரத்தைச் சார்ந்துள்ள சிவத்தலம்.” பாடல் வருமாறு:

  • மருட்கொ டும்தொழில் மன்னவன் இறக்கிய வரியை

நெருக்கி முன்திரு வொற்றியூர் நீங்கவென் றெழுதும் ஒருத்தர் தம்பெரும் கோயிலின் ஒருபுறம் சூழ்ந்த திருப்ப ரப்பையும் உடையதத் திரைக்கடல் வரைப்பு.’ மருள்-மயக்கத்தையும், கொடும்-கொடுமையாக இருக் கும். தொழில்-தொழில்களையும் புரியும்; ஒருமை பன்மை மயக்கம். மன்னவன்-அரசன். இறக்கியவரியை-வாங்கிய வரியை, நெருக்கி-நெருங்கச் செய்து. முன்-முன்பு. திருவொற். றியூர்-திருவொற்றியூர் என்னும் சிவத்தலத்தை. நீங்க-மட்டும் விட்டுவிட.என்று-என எழுதும்-வரையும்.ஒருத்தர்-ஒப்பற்றவ ராகிய மாணிக்கத்தியாகர் எழுந்தருளியிருக்கும். தம்: அசை நிலை. பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். கோயிலின். ஆலயத்தினுடைய, ஒருபுறம்-ஒரு பக்கத்தில். சூழ்ந்த-சுற்றி