பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 295

யிருந்த, திரு-அழகிய. ப்:சந்தி. பரப்பையும்-பரவலாகிய இடங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். உடையதுபெற்றது. அத்திரை-அந்த அலைகள் வீசும்; ஒருமை பன்மை மயக்கம். க்சந்தி. கடல்-சமுத்திரத்தைச் சார்ந்துள்ள. வரைப்பு-சிவத்தலம். -

திருவொற்றியூர்: இது தொண்டை நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திரு. நாமங்கள் மாணிக்கத் தியாகர், படம் பக்கநாதர், ஆதி புரீசுவரர் என்பவை. அம்பிகை வடிவுடையம்மை. தீர்த்தம் பிரம தீர்த்தம், தலவிருட்சம் மகிழ மரம். இது சென்னை மாநகருக்கு வடக தித் திசையில் ஐந்து மைல் தூரத்தில் உள்ளது. இது திருவிளக்குத் தொண்டு புரிந்து வந்த கலிய நாயனார் திருவவதாரம் செய்தருளிய தலம். சங்கிலி நாச்சி யாரைச் சுந்தரமூர்த்தி நாயனார் திருமணம் புரிந்தருளிய தலம் இது. அவர் அந்தச் சங்கிலி நாச்சியாருக்கு மகிழ மரத் தின் அடியில் நான் உன்னைப் பிரியமாட்டேன். என்று சத்தியம் செய்து கொடுத்தார். இந்த வரலாற்றைப் புலப் படுத்தும் மகிழடித் திருவிழா இந்தத் தலத்தில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள தியாகேசர் சந்நிதி சிறப்புடையது. திருக்கோயிலுக்குள் பல சிவலிங்கங்கள் உள்ளன. புற்றிடம் கொண்டாருடைய சந்நிதிக்கு வடக்குத் திசையில் ஆதி: லிங்கம் என்னும் சிவ லிங்கம் இருக்கிறது. சுந்தரமூர்த்தி நாய GrTrf, சங்கிலி நாச்சியார் என்னும் இரண்டு பேர்சளினுடைய விக்கிரகங்கள் மணவாளக் கோலத்தோடு உள்ளன.

பட்டினத்துப் பிள்ளையார் வழிபட்டு முத்தியை, அடைந்த தலமும் இதுவே. பட்டினத்துப் பிள்ளையாருக்கும். திருநாவுக்கரசு நாயனாருக்கும் தனியாக ஆலயங்கள் இங்கே உள்ளன. இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாய னார் பாடியருளிய பாசுரம் ஒன்று வருமாறு:

"மண்ணல்லை விண்ணல்லை வலையம் அல்லை மலையல்லை கடலல்லை வாயு அல்லை