பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 299

உள்ளன. திருக்குளம் கோயிலுக்கு மேற்குத் திசையில் இருக் கிறது. பூம்பாவைப் பதிகத்தில் வரும் முதற் பாசுரம்

வருமாறு:

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டம் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் ஒட்டிட்ட பண்பில் உருத்திர பலகணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.” திருவான்மியூர்: இது தொண்டை நாட்டில் உள்ள சிவத் தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் மருந்தீசுவரர். அம்பிகை சொக்க நாயகி, இது சைதாப்பேட்டையிலிருந்து தென்கிழக்குத் திசையில் நான்கு மைல் தூரத்தில் உள்ளது. இது வான்மீக முனிவர் வழிபட்ட தலம் மருந்தீசுவரர் பால் நிறமான சுயம்பு மூர்த் தி. இந்தத் தலம் கடற்கரையில் உள்ளது. இதைப் பற்றிய ஒரு பாசுரம் வருமாறு: ஒட்டை மாடத்தில் ஒன்பது வாசலும் காட்டில் வேவதன் முன்னம் கழலடி நாட்டி நாண்மலர் து விவலம் செயின் வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே.” இந்தத் தலத்தைப் பற்றித் திருஞான சம்பந்த மூர்த்தி தாயனார் பாடியருளிய கெளசிகப் பண் அமைந்த பாசுரம் ஒன்று வருமாறு:

" விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே உரையார் பல்புகழாய் உமைநங்கை ஒர்பங்குடையாய் திரையார் தெண்கடல்சூழ் திருவான்மியூர் உறையும் அரையா உன்னையல்லால் அடையா தென தாதரவே.' இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு: .

' விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்

அண்ட நாயகன் தான்னடி சூழ்மின்கள் பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும் வண்டு சேர்பொழில் வான்மியூர் ஈசனே.