பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30s) பெரிய புராண விளக்கம்-5

பிறகு உள்ள 41-ஆம் பாடலின் கருத்து வருமாறு: கரையை மோதிக் கொண்டு எழுந்து வீசும் அலைகளைப் பெற்ற சமுத்திரத்தில் பவளக் கொடியினுடைய மென்மை: யான கொழுந்துகள் பக்கத்தில் உள்ள வண்டுகள் மொய்க்கும் மலர்கள் மலர்ந்திருக்கும் மலையில் வளர்ந்து நிற்கும் சந்தன மரத்தினுடைய கிளையின் மேல் படர்ந்து வளரும் இயல்பைப் பெற்று நீளமாக இருக்கும் நெய்தல் நிலமும், குறிஞ்சி நில மும் சேர்ந்துள்ள நிலங்கள் பலவாகும்; காற்றில் அசைந்து ஆடும் நீளமான துவசங்கள் கட்டியிருக்கும் மாடங்கள் ஓங்கி நிற்கும் பெருமையைப் பெற்ற மாமல்லபுரத்தையே அந்த நிலங்கள் ஒத்தவையாக விளங்கும். பாடல் வருமாறு:

கோடு கொண்டெழும் திரைக்கடற் பவளமென் கொழுந்து: மாடு மொய்வரைச் சந்தனச் சினைமிசை வளரும் - நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர்கிலம் பலவால்: ஆடு நீள்கொடி மாடமா மல்லையே அனைய.’’ கோடு-கரையை, கொண்டு-மோதிக் கொண்டு. எழும்எழுந்து வீசும். திரை-அலைகளைப் பெற்ற, ஒருமை பன்மை. மயக்கம். க்:சந்தி. கடல்-சமுத்திரத்தின் அடியில் உள்ள. பவள-பவளக் கொடியினுடைய. மென்-மென்மையான. கொழுந்து-கொழுந்துகள்: ஒருமை பன்மை மயக்கம், மாடுபக்கத்தில் உள்ள. மொய்-வண்டுகள் மொய்க்கும் வரை. மலர்கள் மலர்ந்திருக்கும். வரை. மலையில் வளர்ந்து நிற்கும். ச்: சந்த சந்தன-சந்தன மரத்தினுடைய. ச்:சந்தி. சினை மிசை-கிளையின் மேல், வளரும்-படர்ந்து வளரும். நீடு-நீள மாக இருக்கும். நெய்தலும்-கடலும் கடலைச் சார்ந்த இடங்: களுமாகிய நெய்தல் நிலமும். குறிஞ்சியும்-மலையும் மலை யைச் சார்ந்த இடங்களுமாகிய குறிஞ்சி நிலமும். புணர்சேர்ந்துள்ள. நிலம்-நிலங்கள்; ஒருமை பன்மை மயக்கம். பல-பல ஆகும். ஆல்: அசை நிலை, ஆடு-காற்றில் அசைந்து ஆடும். நீள்-நீளமான கொடி-துவசங்கள் கட்டியிருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். மாடம்-மாடங்கள் ஓங்கி நிற்கும்: