பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 பெரிய புராண விளக்கம்-5

வாழும் தேவர்களினுடைய தலைவராகிய அழகிய ஏகாம் பரேசுவரருடைய ஆலயத்தின் முற்றத்தில் அழகு மலிந் துள்ள தங்கத்தைப் பதித்திருக்கும் கோபுரவாசலில் நெருங்கி வரும் எல்லாத் தேவர்களையும் சமீபமாகக் கொண்டு அந்த நகரம் நடந்து வரும். பாடல் வருமாறு:

அருமறைஅக் தணர்மன்னும் இருக்கை யான - ஆகுதியின் புகைஅடுத்த அம்பொன் மாடப் பெருமறுகு தொறும் வேள்விச் சாலைஎங்கும்

பெறும்அவிர்ப்பாகம்கொடுக்கும் பெற்றி மேலோர் வருமுறைமை அழைத்துவிடு மந்திரம்எம் மருங்கும்

வானவர்கா யகர்திருவே கம்பர் முன்றில் திருமலிபொற் கோபுரத்து நெருங்கும் எல்லாத் - தேவரையும் அணித்தாகக் கொண்டு செல்லும்.’’

அரு-பொருள் தெரிந்துகொள்வதற்கு அருமையாக உள்ள மறை-இருக்கு வேதம். யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான் அவேதங்களையும்முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றிய ஒருமை பன்மை மயக் கம். அந்தணர்-வேதியர்கள்; ஒருமை பன்மை மயக்கம். மன் னும்-நிலைபெற்றுத் தங்களுடைய வாழ்க்கையை நடத்தும். இருக்கையான-இருப்பிடமான. ஆகுதியின்-வேள்விச் êffT @ð} HNJ களில் தீயில் சொரியும் ஆகுதிகளின்; ஒருமை பன்மை மயக்கம். புகை அடுத்த-புகை அந்த வேள்விச் சாலைகளை அடுத்து உள்ள. அம்-அழகிய. பொன்-தங்கத்தைப் பதித்தி ருக்கும். மாட-மாடங்கள் உயர்ந்து நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பெரு-பெரிய மறுகுதொறும்-ஒவ்வொரு வீதியிலும். வேள்விச்சாலை-யாக சாலைகள் உள்ள ஒருமை பன்மை மயக்கம். எங்கும்-எல்லா இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். பெறும்-தேவர்கள் அடையும். அவிர்ப்பா கம்-அவிர்ப்பாகங்களை ஒருமை பன்மை மயக்கம். அவை யாவன: அன்னம், சமித்துக்கள், நெய், அட்சதை, மலர் முதலியன. கொடுக்கும்-வழங்கும். பெற்றி-பான்மை.