பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கு றிப்புத் தொண்ட நாயனார் புராணம் 433

டைய; இது சேக்கிழார் தம்மையும் பிற தொண்டர்களை யும் சேர்த்துக் கூறியது. பெருமான்-தலைவனாகிய ஏகாம்ப ரேசுவரன். தன்னுடைய அடியவர் தம்-தன்பால் பக்தியைக் கொண்ட அடியவர்களுடைய. தம்:அசை நிலை. தனி-ஒப் பற்ற. த்:சந்தி. தொண்டர் தம்முடைய-திருத் தொண்ட ராகிய திருக்குறிப்புத் தொண்ட நாயனாருடைய தம்:அசை நிலை. அந்நிலைமை-அந்த நிலையை, கண்டு-பார்த்தருளி. அன்பர்க்கு-தன்னுடைய பக்தராகிய அந்த நாயனாருக்கு. அருள் புரிவான்-தன்னுடைய திருவருளை வழங்கும் பொருட்டு. வந்து-காஞ்சி மாநகரத்துக்கு வந்து. அணைவார் --சேர்பவரானார்.

பிறகு வரும் 116-ஆம் பாடலின் கருத்து வருமாறு: குளிர் மிகுதியாக உள்ள பின் பனிக்காலத்தில் அந்தத் திருக்குறிப்புத் தொண்ட நாயனாரிடத்திற்கு ஏழையரைப் போல வடிவத்தை எடுத்துக் கொண்டவராகித் தம்முடைய திருமேனி மெலிவை அடைந்து மிகவும் அழுக்கு ஏறிய கந்தல் துணியை உடுத்தவராகி பெருமையைப் பெற்ற ஒரு தவசியின் வேடத்தைத் தரித்துக் கொண்டு திருமால் பன்றியின் உருவத்தை எடுத்துக் கொண்டு தேடிப் பார்த்தும் அறிந்து கொள்ள முடியாத அந்தத் தவசியினுடைய செந்தாமரை மலர்களைப் போன்ற திருவடிகளால் சிறிதும் குற்றத்தை அடையாத திருவுள்ளத்தைப் பெற்றவராகிய அந்த நாயனா ருக்கு முன்னால் குறுகுறு எனத் தம்முடைய திருவடிகளால் நடக்கும் நடைகளைக் கொள்ளுமாறு அந்த நாயனாரி டத்தை அடைந்து. பாடல் வருமாறு: - .

  • சீதம்மலி காலத்துத்

திருக்குறிப்புத் தொண்டர்பால் ஆதுவராய் மெலிந்துமிக

அழுக்கடைந்த கந்தையுடன் மாதவவேடம்தாங்கி

மாலறியா மலரடிகள்