பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 பெரிய புராண விளக்கம்-5

கோதடையா மனத்தவர்முன்

குறுநடைகள் கொளக்குறுகி."

இந்தப் பாடல் குளகம். சிதம்-குளிர். மலி-மிகுதியாக உள்ள. காலத்து-பின் பனிக் காலத்தில். த்:சந்தி. திருக் குறிப்புத் தொண்டர் பால்-திருக்குறிப்புத் தொண்ட நாய னாரிடத்திற்கு. ஆதுவராய்.வறுமையை உடையவரைப் போல ஒரு வடிவத்தை எடுத்துக் கொண்டவராகி. மெலிந்து -தம்முடைய திருமேனி மெலிவை அடைந்து.மிக-மிகுதியாக. அழுக்கு அடைந்த-அழுக்கு ஏறிய, கந்தையுடன்-ஒரு கந்தல் துணியை உடுத்தவராகி; திணை மயக்கம், மாதவ-பெருமை. யைப் பெற்ற ஒரு தவசியினுடைய. வேடம்-வேடத்தை. தாங்கி-தசித்துக் கொண்டு. மால்-திருமால். அறியா-ஒரு பன்றியின் உருவத்தை எடுத்துக் கொண்டு தேடிப் பார்த்தும் அறிந்து கொள்ள முடியாத. மலர்-அந்தத் தவசியினுடைய செந்தாமரை மலர்களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். அடிகள் - திருவடிகளால். கோது .சிறிதளவும் குற்றத்தை. அடையா-அடையாது. மனத்தவர்-திருவுள் ளத்தைப் பெற்றவராகிய அந்த நாயனாருக்கு. முன்-முன் னால். குறு நடைகள்-குறு குறு எனத் தம்முடைய திருவடி களால் நடக்கும் நடைகளை. கொள-கொள்ளுமாறு; இடைக் குறை. க்:சந்தி. குறுகி-அந்த நாயனார் இருக்கும் இடத்தை அடைந்து. .

பிறகு வரும் 117-ஆம் பாடலின் கருத்து வருமாறு: .

'தம்முடைய திருமேனியில் வெண்மையாகிய விபூதி விளங்கி ஒளியை வீசும திருக்கோலத்தோடு கரிய மேகம் என்று சொல்லுமாறு உள்ள ஓர் அழுக்கு ஏறிய கந்தல் துணி யோடு திருக்குறிப்புத் தொண்ட நாயனாருடைய திருமாளி கைக்கு எழுந்தருளி வரும் திருமேனி அருமையாகிய தவத் தைப் புரிந்த அந்தத் தவசியாரைப் பார்த்துத் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தம்முடைய திருவுள்ளத்தில் மகிழ்ச் சியை அடைந்து அந்தத் . தவசியாருக்கு எதிரில் சென்று