பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 435

அவரை வரவேற்றுத் தம்முடைய திருமேனியில் உண்டாகும் மயிர்க்கூச்சலாகிய புளகாங்கிதம் இருப்பவையாக விளங்க. அந்தத் தவசியாரை அந்த நாயனார் தரையில் விழுந்து வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று: கொண்டிருந்தார். பாடல் வருமாறு: -

. " திருமேனி வெண்ணிறு

திகழ்ந்தொளிரும் கோலத்துக் கருமேகம் எனஅழுக்குக்

கங்தையுடன் எழுந்தருளி வருமேனி அருந்தவரைக்

கண்டுமனம் மகிழ்ந்தெதிர்கொண் டுருமேவும் மயிர்ப்புளகம்

உளவாகப் பணிந்தெழுந்தார்.’’ திருமேனி-தம்முடைய திருமேனியில். வெண்-வெண்மை: யாகிய நீறு-விபூதி. திகழ்ந்து-விளங்கி. ஒளிரும்-ஒளியை வீசும். கோலத்து-திருக்கோலத்தோடு. க்சந்தி. கரு-கருமை. யான. மேகம்-முகில். என-என்று கூறுமாறு: இடைக்குறை. அழுக்கு-அழுக்கு ஏறிய க்:சந்தி. சுந்தையுடன்-தம்முடைய இடுப்பில் உடுத்துக் கொண்டிருந்த கந்தல் துணியோடு. எழுந். தருளி வரும்-திருக்குறிப்புத் தொண்டனார் வாழும் திருமாளி கைக்கு எழுந்தருளிவரும்.மேனி-திருமேனி. அரும் அருமையாக இருக்கும். தவரை-தவத்தைப் புரிந்த அந்தத் தவசியாரை. க்:சந்தி. கண்டு-பார்த்து. மனம்-திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தம்முடைய திருவுள்ளத்தில். மகிழ்ந்து-மகிழ்ச் சியை அடைந்து. எதிர்கொண்டு-அந்தத் தவசியாருக்கு எதிரில் சென்று அவரை வரவேற்று. உரு-தம்முடைய திருமேனியில். மேவும்-உண்டாகும். மயிர்ப்புள கம்-மயிர்க், கூச்சலாகிய புளகாங்கிதங்கள்; ஒருமை பன்மை மயக்கம் உளவாக-இருப்பவையாக விளங்க. உள:இடைக்குறை. ப்:சந்தி பணிந்து-அந்தத் தவசியாரை அந்த நாயனார் தரை யில் விழுந்து வணங்கி விட்டு. எழுந்தார்-பிறகு தரையி: