பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 பெரிய புராண விளக்கம்-5

இம்பர் வாழ எழுந்தருளுவதற்குத் திருத்தேர்க் கோயில் செம்பொன் வேய்ந்து.' குந்தவைப் பிராட்டியும் திருச்சிற்றம்பலத்தைப் பொன் னால் வேய்ந்தார். இது பின் வரும் பாடலால் விளங்கும்.

'நானிலத்தை முழுதாண்ட சயதாற்கு

நாற்பத்து நாலாம் ஆண்டில் மீனம்நிகழ் நாயிற்று வெள்ளிபெற்ற

உரோகிணி நாள் இடபப் போதால் தேன்நிலவு பொழில்தில்லை நாயகர்தம்

கோயிலெலாம் செம்பொன் வேயந்தாள் ஏனவரும் தொழு தேத்தும் இராச ராசன்

குந்தவைபூ விந்தை யாளே.' பிறகு உள்ள 9-ஆம் பாடலின் கருத்து வருமாறு: பண்களினுடைய பிரயோசனம் ஆகும் நல்ல சங்கீதத்தை யும், பசுமாட்டினுடைய பாலின் பயன் ஆகும் இனி சுவையை யும், கண்களினுடைய பிரயோசனமாகும் பெருகிய பிரகாச மும், பக்தர்களின் திருவுள்ளங்களைப் பெற்றதனால் உண் டாகும் பிரயோசனமாகிய ந, ம, சி, வா, ய என்ற ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரத்தையும், ஆகாயத்தினு: டைய பிரயோசனமாகும் பொழியும் மாரியையும், வேதங்க ளின் பயனாகும் சைவத்தையும் போல மண்ணுலகத்தினு டைய பயனாக விளங்கும் அந்தச் சிவத்தலமாகிய சேய்ஞலூ ரில் உள்ள வளங்களினுடைய பெருமை ஒர் எல்லையை உடையதோ? எல்லை கடந்தது. பாடல் வருமாறு:

" பண்ணின் பயனாம் கல்லிசையும்,

பாலின் பயனாம் இன்சுவையும், கண்ணின் பயனாம் பெருகொளியும்,

கருத்தின் பயனாம் எழுத்தஞ்சும், விண்ணின் பயனாம் பொழிமழையும், வேதப் பயனாம் சைவமும்போல்