பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 பெரிய புராண விளக்கம்-5

பிறகு உள்ள 20-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "இவ்வாறு அமைந்த சிறப்பை உடைமையினால் கன்றுக் ಠL45677 சன்ற அன்றைக்கே சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் சிற்சபையாகிய திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளும் தலைவராகிய நடராஜப் பெருமா னாருக்குத் தங்கியுள்ள பிறைச்சந்திரனும், கங்கையாறும், சிரிக்கும் வெண்மையான கபாலங்களின் மாலையும் மேவிய சடாபாரத்தைப் பெற்ற தம்முடைய அழகிய முடியின்மேல் விருப்பத்தை அடைந்து அபிடேகத்தை ஏற்றருளுவதற்காகப் பரிசுத்தமாக உள்ள அபிடேகப் பொருள்களாகிய கோமேயம், கோஜலம், பால், நெய், தயிர் என்னும் பஞ்சகவ்வியங்களை யும் வழங்கும் உரிமையைப் பெற்றவை அந்தப் பசுமாடுகள்.” பாடல் வருமாறு: -

" ஆய சிறப்பி னாற்பெற்ற

அன்றே மன்றுள் கடம்புரியும் நாயனார்க்கு வளர்மதியும் நதியும்

நகுவெண் டலைத் தொடையும் மேய வேனித் திருமுடிமேல்

விரும்பி ஆடி அருளுதற்குத் தூய திருமஞ் சனம்ஐந்தும்

அளிக்கும் உரிமைச் சுரபிகள்தாம்.' இந்தப் பாடலும் விசாரசருமர் பசுமாடுகளினுடைய பெருமையை அந்த இடையனுக்கு எடுத்துக் கூறியதைச் சொல்வது. ஆய-அவ்வாறு அமைந்த, சிறப்பினால்-சிறப்பை உடைமையினால். பெற்ற்-கன்றுக்குட்டிகளை ஈன்ற அன்றே -அன்றைக்கே. மன்றுள்-சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் சிற்சபையாகிய திருச்சிற்றம்பலத்தில். நடம்-திரு நடனம். புரியும்-புரிந்தருளும். நாயனார்க்கு-தலைவராகிய நடராஜப் பெருமானாருக்கு. வளர்-தங்கியுள்ள. மதியும். பிறைச்சந்திரனும். நதியும்-கங்கை ஆறும். நகு-சிரிக்கும். வெண்தலை-வெண்மையான கபாலங்களின் ஒருமை