பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 485

பன்மை மயக்கம். தொடையும்-மாலையும். மேய-மேவிய, வேணி-சடாபாரத்தைப் பெற்ற திரு-அழகிய முடிமேல்தலையின் மேல். விரும்பி-விருப்பத்தை அடைந்து. ஆடி அருளுதற்கு-அபிடேகத்தை ஏற்றருளுவதற்காக. த்:சந்தி. துய-பரிசுத்தமாக உள்ள. திருமஞ்சனம்-அபிடேகப் பொருள்களாகிய, ஒருமை பன்மை மயக்கம். ஐந்தும்-கோம யம், கோஜலம், பால், நெய், தயிர் என்னும் பஞ்ச கவ்வியங் களையும். அளிக்கும்-வழங்கும். உரிமை-உரிமையைப் பெற்றவை; ஆகு பெயர். சுரபிகள்-அந்தப் பசு மாடுகள். தாம்: ஈற்றசை நிலை.

சிவபெருமான் ஆனைந்தில் ஆடுதல்: ஆவினில் ஐந்து சுந்தாட்டும் கூடல்.', 'ஆனிற் பொலி வைந்தும் அமர்ந்

தாடி.', 'ஆவில் ஐந்தமர்ந்தவன்.', "ஆனஞ்சாடும் முடியான்.”, 'ஆனிலங்கினர் ஐந்தும் அவிர் முடி ஆடி.’,

'ஆனிலங்கிளர் ஐந்தும் ஆடுவர்.', 'ஆனஞ்சாடிய சென்னி அடிகளுக்கிடம் அரசிலியே.', 'ஆனஞ்சாடும் முடி அடிகள்.", 'ஆனினல் ஐந்து கந்தாடுவர்.' 'ஆனிடை ஐந்து கந்தான்.', 'ஆனமர் ஐந்தும் கொண்டாட்டுகந்த அடிகள்.”, 'ஆனிடை ஐந்து கந்தாடினானை.” என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், 'ஆவினுக் கருங்கலம் அரன் அஞ்சாடுதல்.’’, 'அஞ்சு கொலாமவர் ஆடின தாமே.”, 'ஆனிடை ஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க் கருளும் வைத் தார்.", ஆனகம் அஞ்சும் ஆடும் அடிகள்.', 'ஆனிடை அஞ்சும் கொண்டு அன்பினால் அமர ஆட்டி”, “ஆன் திகழ் ஐந்து கந்தாடும் பிரான்.', 'ஆனிடை ஐந்தும் ஆடுவர்.', 'அளித்த ஆன் அஞ்சும் ஆடிய ஆனையார்.', 'ஆனஞ்சாடிய ஆமாத்துார் ஐயனே.". ஆவின் மேவிய ஐந்தமர்ந்தாடுவான்.", 'அஞ்சும் ஆடல் அமர்ந்து., 'ஆனஞ்சாடியை.”, ஆனஞ்சாடி உகந்த வாட் போக்கியார்.', 'அஞ்சு மஞ்சுமோராடி.", ஆணுற்ற

பெ-31