பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆணாய நாயனார் புராணம் 47.

வந்த-துளைத் த. துளை-துளைகளை, ஒருமை பன்டிை. மயக்கம். நிரை-வரிசையாக ஆக்கி-அமைத்து. வாயு. காற்றை. முதல்-முதலில். வழங்கு வாயை வைத்து ஊதும். துளை-புல்லாங்குழலின் ஒரத்தில் உள்ள துளையை. அந்தம்-முடிவு. இல்-இல்லாத: கடைக்குறை. சீர்-தாளங் களின், ஒருமை பன்மை மயக்கம். இடையீட்டின்-நடுதடுவில். அங்குலி-ஒவ்வோர் அங்குலமாக உள்ள. எண்களின் கணக்கு களில், அமைத்து அமையச் செய்து.

பிறகு வரும் 14-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்த ஆனாய நாயனார் தாம் தம்முடைய திருக்கரங்: களில் ஊதுவதற்காக எடுத்துக் கொண்ட புல்லாங்குழலாகிய இசைக் கருவியில் அடியேங்களுடைய தலைவனாகிய, நடராஜப் பெருமானுக்கு உரிய ந, ம, சி, வா, ய என்ற ஐந்து எழுத்துக்களைக் கொண்ட பஞ்சாட்சரத்தைத் தொடர்ச்சியாக உள்ள முறையில் ச, ரி, க, ம, பத, நிச என்னும் ஏழு சுவரங்களைச் சுருதியோடு இணையுமாறு அமைத்துப் புல்லாங்குழலை வாசித்து அப்படி வாசித்த புல் லாங்குழலின் கீத நாதத் தால், தடுக்கப் பெற்ற அசையும் உயிர்களாகிய சரங்கள், அசையாத உயிர்களாகிய அசரங்கள் ஆகிய எல்லாம் உருக்கத்தை அடைந்து செயலிழந்து நிற்கு மாறு உண்டாகும் தம்முடைய கருணையினால் பாடும் கான மாகிய அமுதத்தைச் செவிகளுக்கு ஊட்டி வரும் செயலை கடத்திக் கொண்டு போகிறவராகிய அந்த நாயனார் அவ் விடத்தில் ஒரு தினம். பாடல் வருமாறு: - " எடுத்தகுழற் கருவியினில் எம் பிரான் எழுத்தஞ்சும்

தொடுத்தமுறை ஏழிசையின் சுருதிபெற வாசித்துத் தடுத்தசரா சரங்கள் எலாம் தங்கவரும் தம்கருணை அடுத்தஇசை அமுதளித்துச் செல்கின்றார் - - அங்கொருநாள்.'" இந்தப் பாடலும் குளகம். எடுத்த-அந்த ஆனாய தாயனார் தாம் தம்முடைய திருக்கரங்களில் ஊதுவதற்காக