பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4常。 - பெரிய புராண விளக்கம்-5

எடுத்துக் கொண்ட குழல் - புல்லாங்குழலாகிய, கருவி ஆயினில்-இசைக் கருவியில். எம்-அடியேங்களுடைய, இது சேக் கிழார் தம்மையும் ஆனாய நாயனாரையும் சேர்த் து ச் சொன்னது. பிரான்-தலைவனாகிய நடராஜப் பெருமானுக்கு. உரிய எழுத்து, அஞ்சும்-ந, ம, சி, வா, ய என்ற ஐந்து எழுத்துக்களைக் கொண்ட பஞ்சாட்சரத்தை. எழுத்து: ஒருமை பன்மை மயக்கம். தொடுத்த-தொடர்ச்சியாக உள்ள. முறை-முறையில். ஏழிசையின் - ச, ரி, க, ம, பத, நிச என்னும் ஏழு சுவரங்களை, இசை: ஒருமை பன்மை மயக் கம். சுருதி பெற-சுருதியோடு இணையுமாறு அமைத்து. வாசித்து-புல்லாங்குழலை ஊதி. த்:சந்தி. தடுத்த-அவ்வாறு ஊதிய புல்லாங்குழலின் கீத நாதத்தால் தடுக்கப் பெற்ற. சராசரங்கள்-அசையும் உயிர்களாகிய மனிதர்கள், விலங்கு. கள், பறவைகள், நீர் வாழ் பிராணிகள் முதலியவையும், அசையாத உயிர்களாகிய மரங்களும், செடிகளும் கொடி. அளும். சரம்: ஒருமை பன்மை மயக்கம். எலாம்-யாவும்: இடைக்குறை. தங்க-உருக்கத்தை அடைந்து செயலிழந்து நிற்குமாறு. வரும்-தம்மிடத்தில் உண்டாகும். தம்-தம் - முடைய. கருணை-கருணையினால், அடுத்த-பாடிய இசைகானமாகிய, அமுது - அமுதத்தை அளித்து - செவிகளுக்கு ஊட்டி. ச்: சந்தி. செல்கின்றார்-வரும் செயலை நடத்திக் கொண்டு போகிறவராகிய அந்த நாயனார். அங்கு-அந்த இடத்தில்: ஒரு நாள்-ஒரு தினம்.

பிறகு உள்ள 15-ம் பாடலின் கருத்து வருமாறு: "நறுமணம் கமழும் மலர்களைக் கட்டிய மாலை பொங்கி எழ ஆனாய நாயனார் தம்முடைய தலைமயிரைக் கோதி வலப்பக்கம் உயரமாக முடித்த ஒளியைப் பெற்ற கொண் டையில் நெருங்கியுள்ள கண்ணியையும் தொடுத்த மாலையும் சொருகிக் கொண்டு பசுமையான இலைகளைக் கொண்ட மென்மையான கொடியாகிய வடத்தில் அமையுமாறு நறு விளங்காய்களை அணிந்து கொண்டு தங்கக் காசுகளைக்