பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 பெரிய புராண விளக்கம்-5

பிப் புற்களை மேயும் பசுமாடுகளோடு கூட விரைவில் அவர் அடைந்து, பாலைத் தங்களுடைய மடிகளிலிருந்து சுரக்கும் பசுமாடுகள் ஒன்றுக்கு ஒன்று பின்பாக அவருக்கு எதிரில் நடந்து போக அந்தப் பசுமாடுகளும் கனைத்துக் கொண்டு தங்களுடைய முலைகளைத் தொட்ட மாத்திரத் தில் செழுமையான இனிய சுவையைப் பெற்ற பாலைச் சுரந்தன.” பாடல் வருமாறு:

. நல்ல நவகும் பங்கள் பெற

நாடிக் கொண்டு நாணற்பூங் கொல்லை யிடத்தும் குறைமறைவும்

மேவும் கோக்கள் உடன்கூட ஒல்லை அணைந்து பாலாக்கள்

ஒன்றுக் கொருகா லாகஎதிர் செல்ல அவையும் கனைத்துமுலை . தீண்டச் செழும்பால் பொழிந்தனவால்.’’ நல்ல-நல்லவையாக உள்ள. நவ-புதிய கும்பங்கள்குடங்களை. பெற-பெறுவதற்காக. நாடி-அவற்றைத் தேடிச் சென்று. க்:சந்தி. கொண்டு-அவற்றை விசாரசருமர் தம்முடைய கைகளில் எடுத்துக் கொண்டுவந்து. நாணல்நாணற் செடிகளில் மலர்ந்த ஒருமை பன்மை மயக்கம். பூம்மலர்களை; ஒருமை பன்மை மயக்கம். கொல்லையிடத்தும். முல்லை நிலமாகிய காட்டின் இடத்திலும். குறை-மண்ணி யாற்றில் நடுவில் உள்ள திட்டிலும். மறைவும்-மறைவாக உள்ள இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். மேவும். விரும்பிப் புற்களை மேய்ந்து கொண்டிருக்கும். கோக்கள் உடன்கூட-பசுமாடுகளோடு கூடவே, ஒல்லை-விரைவில். அணைந்து- புல் வெளியை அடைந்து. பால்-தங்களுடைய மடிகளில் உள்ள முலைகளிலிருந்து இனிய சுவையைப் பெற்ற: பாலைத்தரும். ஆக்கள்-பசுமாடுகள். ஒன்றுக்கு ஒருகாலாகஒன்றுக்கு ஒன்று பின்பாக. எதிர்-அந்த விசார சருமருக்கு. எதிரில். செல்ல-நடந்து போக். அவையும்-அந்தப் பசுமாடு,