பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542 . - பெரிய புராண விளக்கம்-5

மலர்ந்திருக்கும் மலர்களை மழைகளைப் போலச் சொரியவும், பல ஆயிரம் பேர்களாகிய சிவகணத் தலைவர்கள் பாடல் களைப் பாடியும் நடனம் ஆடியும் மகிழ்ச்சியோடு இருக்கவும். மந்திரங்களாகிய சொற்கள் நிரம்பியுள்ள இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களும் தோத்திரங்களைக் கூறவும், சுற்றிலும் உள்ள பல வகையான வாத்தியங்களை அவற்றை உடைய வர்கள் வாசிக்கவும், சைவ சமயமாகிய நல்ல வழி ஓங்கி விளங்கவும், திருத் தொண்டர்களுக்குத் தலைவரும், அடி யேங்களுடைய தலைவருமாகிய சண்டீசர் நடராஜப் பெரு மானாரை வணங்கிச் சிவலோக பதவியை அடைந்தார்." பாடல் வருமாறு:

‘ எல்லா உலகும் ஆர்ப்பெடுப்ப

எங்கும் மலர்மா ரிகள்பொழியப் பல்லா யிரவர் கணங்ாதர்

பாடி ஆடிக் களிபயிலச் சொல்லார் மறைகள் துதிசெய்யச் சூழ்பல் லியங்கள் எழச்சைவ கல்லா றோங்க நாயகமாம்

கங்கள் பெருமான் தொழுதணைந்தார்.' எல்லா-உலகும்-எல்லா உலகங்களிலும் வாழ்பவர்கள்; இட ஆகு பெயர். உலகும். ஒருமை பன்மை மயக்கம். ஆர்ப்புஆரவார ஒலியை. எடுப்ப-எழுப்பவும். எங்கும்-எல்லா இடங் களிலும்; ஒருமை பன்மை மயக்கம். மலர்-தேவலோகத்தில் வாழும் தேவர்கள் அந்த லோகத்தில் வளர்ந்து நிற்கும் கற்பக மரத்தில் மலர்ந்துள்ள மலர்களை ஒருமை பன்மை மயக்கம். மாரிகள்-மழைகளைப் போல; உவம ஆகு பெயர். பொழிய-சொரியவும். ப்:சந்தி. பல்-பல. ஆயிரவர்-ஆயிரம் பேர்களாகிய, கண-சிவகணங்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நாதர்-தலைவர்கள்; ஒருமை பன்மை மயக்கம்.