பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 543.

பாடி-பல பாடல்களைப் பாடிக் கொண்டும். ஆடி-நட னம் ஆடிக் கொண்டும். க்:சந்தி, களி மகிழ்ச்சிபோடு. பயில. இருக் கவும், ச்: சந்தி. சொல்-மந்திரங்களாகிய சொற்கள்; ஒருமை பன்ம்ை மயக்கம். ஆர்-நிரம்பி புள்ள மறைகள்-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களும். துதி: ஒருமை பன்மை மயக்கம் துதி செய்ய-தோத்திரங்கள் கூறவும். துதி: ஒருமை பன்மை மயக்கம். ச்சந்தி. சூழ்-சுற்றிலும் உள்ள பல்-பலவாகிய, இயங்கள்-வாத்தியங்களை; அவையாவன நாகசுரம், ஒத்து, கஞ்சதாளங்கள், மத்தளம், முரசு, பேரிகை, வீணை, யாழ், முகவீணை, சல்லரி, தம்புரா, இடக்கை, தமருகம், ஜலதரங்கம், உடல் முதலியவை. எழ.அவற்றை உடையவர்கள் வாசிக்கவும். ச்: சந் தி. சைவ-சைவ சமய மாகிய, நல்-நல்ல. ஆறு-வழி. ஒங்க-தழைத்து ஓங்கி வளரவும். நாயகமாம்-திருத்தொண்டர்களுக்குத் தலை வரும்; திணை மயக்கம். நங்கள்-அடிபேங்களுடைய. இது சேக்கிழார் தம்மையும் பிற தொண்டர்களையும் சேர்த்துக் கூறியது. பெருமான்-தலைவராகிய சண்டிசுர நாயனார்; ஒருமை பன்மை மயக்கம். தொழுது..நடராஜப் பெரு щотаттєвоут வணங்கிவிட்டு. அனைந்தார் - சிவலோக பதவியை அடைந்தார்.

அடுத்து உள்ள 58-ஆம் கவியின் கருத்து வருமாறு: 'இந்தப் பூ மண்டலத்தில் வாழும் மக்கள் தெரிந்து கொள்ளுமாறு தன்னுடைய புதல்வராகிய விசாரசருமர் மணல்களைக் குவித்துத் தாபித்திருந்த சிவலிங்கப் பெரு மானைத் தன்னுடைய கால்களால் உதைத்துத் தள்ளி விட்ட தாகிய குற்றத்தைச் செய்து நம்பராகிய நடராஜப் பெரு மானார் வழங்கிய திரு வருளினால், இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களில் கூறப் பெற்ற நற்குண நல்லொழுக்கம் பெற்று விளங்குபவரும், சேய்ஞலூரில் திருவவதாரம் செய்தருளிய வரும், சிறுவருமாகிய விசார சருமருடைய அழகிய கையில்