பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 9, so

சென்றவனுக் குரை' என்று

திலகவதி யார்மொழிய அன்றவனும் மீண்டுபோய்ப்

புகுந்தபடி அவர்க்குரைத்தான்.'

என்று-என. அவன்.அந்தச் சமையற்காரன். முன்-- திலகவதியாருக்கு முன்னால் கூறுதலும்-சொன்னவுடன் யான்-நான். அங்கு-என் தம்பியாகிய மருணிக்கி உள்ள அந்த, இடத்திற்கு. உன்னுடன்-உன்னோடு. போந்து-வந்து. நன்று-நல்ல செயல்களை ஒருமை பன் மை மயக்கம். அறியா-தெரிந்து கொள்ளாத அமண்-சமணத் துறவிகள் தங்கியிருக்ரும்; திணை மயக்கம். பாழி-பாழிக்கு. நண்ணு. கிலேன்-யான் வரமாட்டேன். எனும்-என்று யான் கூறும்: இடைக்குறை. மாற்றம்-வார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். சென்று-அந்த மருணிக்கி உள்ள இடத்திற்குப் போய். அவனுக்கு- என் தம்பியாகிய அந்த மருணிக்கிக்கு. உரை-நீ கூறுவாயாக. என்று-என. திலகவதியார்-மருணிக்கி, யாருடைய தமக்கையாராகிய திலகவதியார். மொழியஇவ்வாறு திரு வாய் மலர்ந்தருளிச் செய்ய அன்றுஅன்றைக்கு. அவனும் அந்தச் சமையற்காரனும். மீண்டு. திரும்பி. போய்-மருணிக்கியார் தங்கியிருக்கும் அமண்பா ழிக். குச் சென்று. ப்:சந்தி. புகுந்தபடி-நடந்த விதத்தை. அவர்க்கு-அந்த மருணிக்கியாரிடம்: உருபு மயக்கம். உரைத் "... தான்.கூறினான். . . . . . . . . பிறகு உள்ள 59-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

அந்தச் சமையற்காரன் கூறிய அந்த வார்த்தைகளை மருணிக்கியார் கேட்டவுடன் சோர்வை அடைந்து. "இந் தக், - துன்பத்தைப் போக்குவதற்கு இனிமேல் அடியேன்" எவ்வு - புரிவேன்? என்று எண்ணி பரமேசுவரராகிய திருவதி தை,

'அடியேனுக்குப் பொருத்தம் இல்லாத இந்தப் பொலிவற்ற தாகிய சமண சமயத்திலிருந்து போகர்த இந்தத் துயரம்,