பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 101

'அவ்வாறு அந்த மருணிக்கியார் தம்முடைய திருவுள் வாத்தில் எடுத்துக் கொண்ட எண்ணம் தாம் உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம் எழுந்து இருப்பதால் அதற்கு ஏற்ப எழுந்த முயற்சி தம்மிடம் உண்டானவுடனே தமக்கு உண்டாகியிருந்த சோர்வு விலகிப் போகத் திருவதிகை வீரட் டானத்தைப் போய்ச் சேருவதற்காக தாம் உடுத்துக் கொண்டு திரியும் பாய் நீங்கவும், உறியில் வைத்திருக்கும் கமண்டலம் நீங்கவும், கட்டி வைத்திருந்த மயிற் பீலிகளும் அகலுமாறு அந்தத் திருவதிகை வீரட்டானத்திற்குச் செல்லு வதற்குத் தீர்மானம் செய்து எழுந்து புறப்பட்டார். பாடல் வருமாறு:

“ எடுத்தமனக் கருத்துய்ய எழுதலால் எழுமுயற்சி அடுத்தலுமே அயர்வொதுங்கத் திருவதிகை அணைவதனுக் குடுத்துழலும் பாயொழிய

உறியுறுகுண் டிகையொழியத் தொடுத்தபீ லியும்ஒழியப் + போவதற்குத் துணிந்தெழுந்தார்.' எடுத்த-அவ்வாறு அந்த மருணிக்கியார் எடுத்துக் கொண்ட மன தம்முடைய திருவுள்ளத்தில். க்:சந்தி, கருத்து-மேற்கொண்ட எண்ணம். உய்யதாம் உஜ்ஜீவ னத்தை அடையும் வண்ணம் வயிற்றுவலியால் தம்முடைய உயிர் போகாத வண்ணம். எழுதலால்-எழுந்திருப்பதால், எழும்-அதற்கு ஏற்றபடி எழுந்த முயற்சி-இடைவிடாத செயல். அடுத்தலும் தம்மிடம் உண்டாகியவுடன். ஏ:அசை நிலை. அயர்வு-தமக்கு உண்டாகியிருந்த சோர்வு. ஒதுங்கவிலகிப் போக. த்:சந்தி. திருவதிகை-திருவதிகை வீரட் டானத்தை. அணைவதனுக்கு-போய்ச் சேருவதற்காக. உடுத்து-தாம் உடுத்துக் கொண்டு. உழலும்-திரியும். பாய்

தி-7 - - - ... . . . . . .