பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பெரிய புராண விளக்கம்- 6.

ஒழியு-பாய் நீங்கவும். உறி-உறியில் உறு-தாம் வைத் திருந்த குண்டிகை கமண்டலம். ஒழிய-நீங்கள்ம். த்:சந்தி, தொடுத்த-கட்டி வைத்திருந்த, பீவியும்-மயிர்பீலிகளும்; ஒருமை பன்மை மயக்கம். ஒழிய-அகலுமாறு. ப்:சந்தி. போவதற்கு-அந்தத் திருவதிகை வீரட்டானத்திற்கு எழுந்: தருள்வதற்கு, த்:சந்தி, துணிந்து-தீர்மானம் செய்தருளி. எழுந்தார்.அந்த அமண் பாழியிலிருந்து எழுந்து புறப்பட். டார்." - -

அடுத்து உள்ள 61-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

பொய் வார்த்தைகளைக் கூறுமாறு வழங்கும் பக்கத் தைக் கொண்ட உள்ளங்களையும் பொலிவின்மையையும் பெற்ற சமணத்துறவிகள் தங்கியிருந்த இடமாகிய அமண் பாழியை அந்த மருணிக்கியார் கடந்து உண்மையை அளிக் கும் சிறப்பைப் பெற்ற சைவ சமய வழியைச் சேர்பவராகி வெண்மையான ஆடையைத் தம்முடைய திருமேனியின் மேல் சுற்றிப் போர்த்துக் கொண்டு தமக்குக் கை கொடுப்ப வர்களை எண்ணிப் பார்த்து யாரும் பாராத வண்ணம் இராத்திரி வேளையில் புரிந்த தலத்தைப் பெற்ற பெரிய தவசியாராகிய திலகவதியார் வாழ்ந்து கொண்டிருக்கும். திருவதிகை வீரட்டானத்திற்குப் போய்ச் சேர்பவரானார். பாடல் வருமாறு: - -

  • : . * பொய்தருமால் உள்ளத்துப்

புன்சமணர் இடங்கழிந்து மெய்தருவான் நெறியடைவார்

வெண்புடைவை மெய்சூழ்ந்து கைதருவார் தமையூன்றிக்

கானாமே இரவின்கண் செய்தவமாதவர்வாழும்

திருவதிகை சென்றடைவார். பொய்-பொய் வார்த்தைகளை ஒருமை பன்மை மயக் கம். தரு-கூறுமாறு வழங்கும். மால்-மயக்கத்தைக் கொண்ட,