பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 103

உள்ளத்து-உள்ளங்களையும் ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. புன்-தோற்றப் பொலிவு இன்மையையும் பெற்ற: சமணர்கள் நீராடுதல் இன்மையால் அவர்களுடைய உடம்பு கள் அழுக்குப் படிந்து தோற்றப் பொலிவு இல்லாமல் இருக் கும். சமனர்.சமணத் துறவிகள்; ஒருமை பன்மை மயக்கம், இடம் தங்கியிருந்த இடமாகிய அமண் பாழியை. கழிந்து. அந்த மருணிக்கியார் விட்டு விட்டு. மெய்-உண்மையை, தருஅளிக்கும். வான்-சிறப்பைப் பெற்ற நெறி-சைவ சமய வழியை. அடைவார்-சேர்பவராசி; முற்றெச்சம். வெண். வெண்மையாகிய, புடைவை-ஆடையை மெய். தம்முடைய திருமேனியின்மேல். சூழ்ந்து-சுற்றிப்போர்த்துக் கொண்டு. கை தருவார்தமிை-தமக்குக் கைகொடுப்பவர்களை; ஒருமை பன்மை மயக்கம். ஊன்றி-எண்ணிப் பார்த்து. க்:சந்தி. கானாமே. யாரும் பாராத வண்ணம்; அவ்வாறு உதவி புரிய வாக யாரையும் பார்க்க முடியாமல்’ எனலும் ஆம். இரவின்கண்-அன்று இராத்திரி வேளையில், செய்-புரிந்த. தவ-தவத்தைப் பெற்ற மாதவர்-பெரிய தவசியாராகிய திலகவதியார். வாழும்-வாழ்ந்து கொண்டிருக்கும். திரு வதிகை-திருல திகை வீரட்டானத்திற்கு. சென்று அடை வார்-போய்ச் சேர்பவரானார். .

பிறகு வரும் 12-ஆம் பாடவின் கருத்து வருமாறு:

அவ்வாறு திருவதிகை விரட்டானத்திற்குப் போய்ச் சோந்தவராகிய மருணிக்கியார் சேர்ந்து தகமுடைய வயிற்றுக்கு உள்ளே எரியும் சூலை நோயோடு தொடர்ந்து செல்லுவதற்குத் தம்முடைய திருவுள்ளததில் அமைந்து எழுந்து சாரும் பெரிய விருப்பம் அவரைச் செலுத்திக் கொண்டு அடையச் சிறப்பைப் பெற்ற மலையைப் போல இருந்து விளங்குகின்ற மாணிக்கங்களைப் பதித்திருக்கும் - திருமதிலினுடைய ஒளிவெள்ளம் எதிரில் தோன்றும் திருவதிகை வீரட்டானத்தில் தம்முடைய தமக்கையாராகிற -