பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 பெரிய புராண விளக்கம்

திலகவதியார் தங்கிக் கொண்டிருந்த அழகிய மடத்திற்குப் போய்ச் சேர்ந்தார். பாடல் வருமாறு:

சுலவிவயிற் றகம்கனலும்

சூலைநோ யுடன்தொடரக் குலவிஎழும் பெருவிருப்புக்

கொண்டணையக் குலவரையோன் றிலகுமணி மதிற்சோதி

எதிர்கொள்திரு வதிகையினில் திலகவதி யார்இருந்த

திருமடத்தைச் சென்றணைந்தார்.' கலவி-அவ்வாறு திருவதிகை வீரட்டானத்திற்ருப் போய் சேர்ந்தவராகிய மருணிக்கியார் சேர்ந்து. வயிற்று-தம்மு டைய வயிற்றுக்கு. அகம்-உள்ளே. கனலும்-தீயைப் போல எரியும். சூலை நோயுடன்-சூலை நோயோடு. தொடரதொடர்ந்து செல்லுவதற்கு. க், சந்தி. குலவி-தம்முடைய திருவுள்ளத்தில் அமைந்து. எழும்-எழுந்து பொங்கும். பெரு -பெரிய. விருப்பு-விருப்பம். க்:சந்தி. கொண்டு-அவரை உந்தித் தள்ளிக் கொண்டு. அணைய-அடைய. க்:சந்தி. குலசிறப்பைப் பெற்ற வரை-மலையை போன்று-போல அமைந்து. இலகு-விளங்கும். மணி-மாணிக்கங்களைப் பதித் திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். மதில்-திருமதில் விசும். சோதி-ஒளி வெள்ளத்தை. எதிர்கொள் தம்முடைய எதிரில் கொண்ட, திருவதிகையினில்-திருவதிகை வீரட்டானத்தில், திலகவதியார்-தம்முடைய தமக்கையாராகிய திலகவதியார். இருந்த-தங்கிக் கொண்டிருந்த. திரு-அழகிய. மடத்தை. மடத்திற்கு உருபு மயக்கம். ச்:சந்தி. சென்று-அந்த மருணிக் கியார் எழுந்தருளி, அணைந்தார்-சேர்ந்தார்.

திருமதிலுக்கு மலை உவமை: "நால்வகைச் சதுரம் விதி முறை நாட்டி நனிதவ உயர்ந்தன. பனிதோய், மால்வரைக் குலத்தின்யாவையும் இல்லை ஆதலால் உவமை ம்ற்றில்லை, நூல் வரைத் தொடர்ந்து பயத்தொடும் பழகி நுணங்கிய