பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 195

நுவலரும் உணர்வே, போல் வகைத்தல்லால் உயர்வினோ டுயர்ந்ததென்னலாம் பொன் மதில் நிலையே." (கம்பராமா யணம், நகரப் படலம், 8) என வருவதைக் காண்க.

பிறகு வரும் 63-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'அவ்வாறு மருணிக்கியார் தம்முடைய தமக்கையாராகிய திலகவதியார் தங்கிக் கொண்டிருந்த திருமடத்திற்குப் போய்ச் சேர்ந்து அந்தத் திலகவதியாருடைய திருவடிகளின் மேல் படியப் பணிந்து, அடியேங்களுடைய சாதியினர் முற். பிறப்பில் புரிந்த நல்ல தவத்தினுடைய பிரயோசனத்தைப் போல விளங்குபவரே, இந்த அடியேனுடைய உடம்பில் உண்டான கொடுமையாக இருக்கும் சூலை நோயினால் வருத்தத்தை அடைந்து இங்கே வந்து சேர்ந்தேன்; இனிமேல் அடியேன் மயக்சத்தை அடையாமல் உஜ்ஜீவனத்தை அடைந்து சமண சமயமாகிய படுகுழியிலிருந்து கரையின் மேல் ஏறும் வழியைத் தாங்கள் திருவாய் மலர்ந்தருளிச் செய் வீராக." என்று அந்த மருணிக்கியார் திருவாய் மலர்ந் தருளிச் செய்து. பாடல் வருமாறு: -

வந்தணைந்து திலகவதி

யார்அடிமே லுறவணங்கி 'நந்தமது குலம்செய்த

நற்றவத்தின் பயன் அனையீர், இந்தவுடற் கொடும்.சூலைக்

கிடைந்தடைந்தேன்; இனிமயங்கா துய்ந்துகரை ஏறுநெறி

உரைத்தருளும்’ எனஉரைத்து.' இந்தப் பாடல் குளகம். வந்து-அவ்வாறு மருணிக்கியார் தம்முடைய தமக்கையாராகிய திலகவதியார் தங்கிக் கொண் டிருந்த திருமடத்திற்குப் போய். அணைந்து-சேர்ந்து. திலகவதியார்-அந்தத் திலகவதியாருடைய. அடிமேல்-திரு வடிகளின் மேல்;ஒருமை பன்மைமயக்கம்.உற-படிய வண்ங்கி -பணித்து. நந் தமது-அடியேங்களுடைய இது மருணிக்கி