பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 197

தாளிணைமேல் விழுந்தயரும் தம்பியார் தமைநோக்கி ஆளுடைய தம்பெருமான்

அருள்கிணைந்து கைதொழுது 'கோளில்பர சமயநெறிக்

குழியில்விழுங் தறியாது மூளும் அரும் துயர்உழந்தீர்,

எழுந்திரீர். எனமொழிந்தார்.' * 576ಗೆ ಸಣT மேல்-அவ்வாறு தம்முடைய இரண்டு திரு வடிகளின் மேல். தாள்: ஒருமை பன்மை மயக்கம், விழுந்து - விழுந்து வணங்கி. அயரும்.சோர்வை அடையும். த . பியார் தமை-தம்பியாராகிய மருணிக்கியாரை. தம்:அசை நிலை. தமை: இடைக்குறை. நோக்கி-அந்தத் திலகவதியார் பார்த்து. ஆளுடையதம்மை ஆளாக உடைய. தம்-தம்மு டைய. பெருமான்-தலைவனாகிய விரட் டானே சுவரன். அருள்-வழங்கும் திருவருள்ை. நினைந்து-எண்ணி. கை-தம்மு டைய கரங்களைத் தம்முடைய தலையின்மேல் வைத்துக் கும்பிட்டு; ஒருமை பன்மை மயக்கம். தொழுது-பிறகு தரை யின்மேல் விழுந்து அந்த ஈசுவரனை வணங்கி விட்டு. கோள் -சான்றோர்கள் ஏற்றுக் கொள்ளுதல். இல்-இல்லாத. பர. வேறு. சமய-சமயமாகிய, நெறி-சமண சமய வழியாகிய, க்:சந்தி, குழியில் விழுந்து-படுகுழியில் விழுந்து. அறியாதுஅந்தக் குழியிலிருந்து கரை ஏறுவதைத் தெரிந்து கொள்ளள் 1ால், மூளும்-மூண்டிருக்கும். அரும்-சகிப்பதற்கு அருமையாக இருக்கும். துயர்-துயரத்தினால், உழந்தீர் நீர் வருத்தத்தை அடைந்தீர். எழுந்திரீர்-தரையிலிருந்து எழுந்திருப்பீராக. என்.என்று இடைக்குறை. மொழிந்தார்-அந்தத் திலகவதி

யார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.

டுத்து வரும் 65-ஆம் பாடலின் கருத்து வருமாறு: .” தம்முடைய தமக்கையாராகிய திலகவதியார் திருவாங். மலர்ந்தருளிச் செய்த அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன்