பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 4 f .

'திருவருளாகிய செல் வத்தைப் பெற்றவனாகிய கைலாச பதிக்கு உரிய விபூதியைத் தமக்குத் தம்முடைய தமக்கையா ராகிய திலகவதியார் வழங்கியருள, அடியேனுக்குப் பெரிய நல்ல வாழ்வு வந்து விட்டது' என்று எண்ணிப் பெருமையை யும் தகுதியையும் பெற்றவராகிய அந்த மருணிக்கியார் தம்மு டைய தமக்கையாரை வணங்கி அவர் வழங்கியருளிய விபூதி யைத் தம்முடைய திருக்கரங்களில் வாங்கிக் கொண்டு அந்தி இடத்தில் தம்முடைய திருமேனியில் நிரம்பப் பூசிக் கொண்டு தமக்கு ஒரு துன்பம் வந்த சமயத்தில் உஜ்ஜீவனத்தை அடையும் சைவ சமய வழியை ஏற்றுக் கொண்டு வழங்குபவ ராகித் தமக்கு முன்னால் திருவவதாரம் செய்தருளியவராகிய திலகவதியாருக்குப் பின்னால் அந்த மருணிக்கியார் எழுந் தருளினார். பாடல் வருமாறு:

திருவாளன் திருநீறு

திலகவதி யார்.அளிப்பப் பெருவாழ்வு வந்த 'தெனப்

பெருந்தகையார் பணிந்தேற்றங் குருவார அணிந்துதமக்

குற்றவிடத் துய்யுநெறி தருவாராய்த் தம்முன்பு

வந்தார்பின் தாம்வந்தார்.” திருவாளன்-திருவருளாகிய செல்வத்தைப் பெற்றவ னாகிய கைலாசபதிக்கு உரிய திருநீறு-விபூதியை. திலகவதி யார்-தம்முடைய தமக்கையாராகிய அந்தத் திலகவதியார். அளிப்ப-வழங்கியருள. ப்:சந்தி. பெரு-அடியேனுக்குப் பெரிய வாழ்வு-நல்ல வாழ்வு. வந்தது-வந்து விட்டது. என-என்று எண்ணி; இடைக்குறை. ப்:சந்தி. பெரும்பெருமையையும். தகையார்-தகுதியையும் பெற்றவராகிய அந்த மருணிக்கியார். பணிந்து-தம்முடைய தமக்கையாரை வணங்கி, ஏற்று-அவர் வழங்கியருளிய விபூதியைத்