பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 பெரிய புராண விளக்கம்:-6

யாராகிய அந்த மருணிக்கியாருக்கு வழங்கியருளினார்." - பாடல் வருமாறு: -

' என்றபொழு தவரருளை

எதிரேற்றுக் கொண்டிறைஞ்ச நின்றதபோ தனியாரும்

நின்மலன் பேர் அருள் கினைந்து சென்றுதிரு வீரட்டம்

புகுவதற்குத் திருக்கயிலைக் குன்றுடையார் திருநீற்றை -

அஞ்செழுத்தோ திக்கொடுத்தார்.' என்ற-ான அந்தத் திலகவதியார் மருணிக்கியாராகிய தமக்குக் கட்டளையிட்ட பொழுது-சமயத்தில். அவர்-அந்த மாதரசியார். அருளை-வழங்கிய திருவ ளை. எதிர்அவருக்கு எதிரில் ஏற்றுக் கொண்டு-அந்த மருணிக்கியார் ஏற்றுக் கொண்டு. இறைஞ்ச-அந்த மாதரசியாரை வணங்க. நின்ற-அங்கே நின்று கொண்டிருந்த. தபோதனியாரும்தவத்தையே செல்வமாகப் பெற்றவராகிய அந்தத திலகவதி யாரும். நின்மலன்-ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களும் இல்லாதவனாகிய வீரட்டானேசுவரன். பேர்-வழங்கிய பெரிய அருள்-திருவருளை. நினைந்துஎண்ணி. சென்று தம்முடைய திருமடத்திலிருந்து போய். திருவீரட்டம்-திருவதிகை வீரட்டானத்தை. புகுவதற்குஅடைவதற்காக, த்:சந்தி. திரு-அழகிய க், சந்தி, கயிலைக் குன்றுடையார்-கபிலாய மலையைத் தம்முடைய நித்திய வாசத் தலமாகப் பெற்றவராகிய கைலாசபதியருக்கு உரிய. திருநீற்றை-விபூதியை. அஞ்சு - எழுத்து . மி, சி, வர், {Lጆ என்னும் ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரத்தை எழுத்து: ஒருமை பன்மை மயக்கம். ஒதி-உச்சரித்து. க்:சந்தி, கொடுத்தார்-தம்முடைய தம்பியாராகிய அந்த மருணிக்கி யாருக்கு வழங்கியருளினார். S S S S S S S

பிறகு வரும் 67-ஆம் கவியின்

கருத்து வருமாறு: