பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 109.

தவத்தைப் புரிந்தவராகிய அந்த மாதரசியார். கற்றை-கற்றையாகிய வேணியர்-சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவராகிய வீரட்டானேசுவரர், அருளே-வழங்கிய திருவருளே. இது. இவ்வாறு நீர் அடியேனி. டம் வந்து சேர்ந்த இந்தச் செயல். காணும்-என்பதை அறிந்து கொள்வீராக. கழல்-தம்மூடைய வெற்றிக் கழலைப் பூண்ட திருவடிகளை ஆகு பெயர். அடைந்தோர். அடைந்த வர்களாகிய பக்தர்களுடைய, ஒருமை பன்மை மயக்கம். பற்று-அகப் பற்று, புறப்பற்று என்னும் பற்றுக்களை: ஒருமை பன்மை மயச்சம். அறுப்பார்தமை-போக்கியருளுபவ ராகிய வீரட்டானேசுவரரை. தம்: அசை நிலை, தமை: இடைக்குறை. ப்:சந்தி, பணித்து-வணங்கிக் கொண்டு. பணிதிருப்பணிகளை ஒருமை பன்மை மயக்கம். செய்வீர்-நீர் புரிவீராக. என-என்று இடைக்குறை. ப்:சந்தி. பணித்தார்அந்தத் திலகவதியார் தம்முடைய தம்பியாராகிய மருணிக்கி யாருக்குக் கட்டளையிட்டார்.

அடுத்து உள்ள 66-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

"என அந்தத் திலகவதியார் மருணிக்கியாராகிய தமக்குக் கட்டளையிட்ட சமயத்தில் அந்த மாதரசியார் வழங்கிய திருவருளை அவருடைய எதிரில் ஏற்றுக் கொண்டு தம்மு: டைய தமக்கையாராகிய அந்த மாதர்சியாரை வணங்க, அங்கே நின்று கொண்டிருந்த தவமாகிய செல்வத்தைப் பெற்ற அந்தத் திலகவதியாரும் ஆணவம், மாயை, கன்மம். என்னும் மூன்று மலங்களும் இல்லாதவனாகிய வீரட்டானேசு வரன் வழங்கிய பெரிய திருவருளை எண்ணித் தம்முடைய திருமடத்திலிருந்து போய்த் தி ரு வீரட் டானத் ைத அடைவதற்கு அழகிய கயிலை மலையைத் தம்முடைய நித்திய வாசத் தலமாகப் பெற்ற கைலாச பதியாருக்குரிய விபூதியை ந, ம, சி, வா, ய என்னும் ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரத்தை உச்சரித்துத் தம்முடைய தம்பி.