பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பெரிய புராண விளக்கம்-6

அந்த மருணிக்கியார் வயிற்று வலியோடு இருந்தாலும் தம்முடைய தமக்கையாராகிய திலகவதியாரிடம் சென்றால் அந்த சூலை நோய் தீர வழி உண்டாகும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தமையால் அவர் திருவதிகை வீரட்டானத் திற்குத் திருப்பாதிரிப் புலியூரிலிருந்து நடந்து வரும் ஆற்ற லைப் பெற்றார். அந்தத் திலகவதியார் திருவாளன் திரு நீற்றை வழங்கவே அதனை அணிந்து கொண்ட போது அவ ருடைய வயிற்றுவலி அகன்றுவிட்டது. ஆனாலும் விரட்டா னேசுவரருடைய சந்நிதியில் பாடும்போது வேதனை தாங்கவில்லையே என்று முறையிட்டுக் கொண்டார். கீழே விழுந்த ஒரு குழந்தை அப்போது அழா விட்டாலும் தன்னு டைய தாயைக் கண்டவுடன் அழுது புலம்பும். அவ்வாறு மருணிக்கியார் வீரட்டானேசுவரரைத் தர்சித்த போது இவ்வாறு முறையிட்டுக் கொண்டார்.

பிறகு வரும் 71-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்த மருணிக்கியார் பாடியருளியதும் நிலை பெற்று விளங்குவதும் ஆகிய அந்தத் திருப்பதிகத்தைப் பாடியருளிய பிறகு அவருடைய வயிற்றில் இருந்து துன்பத்தை உண்டாக் கிய சூலை நோயாகிய கொடிய வியாதி அவ்வாறு வீரட்டா னேசுவரருடைய சந்நிதியில் நின்று கொண்டிருந்த நிலையில் போனவுடன், "அடியேனுடைய உயிரோடு வீரட்டானேசு வரர் வழங்கிய திருவருளை இந்தச்சூலை நோய் வழங் கியது. என்று செம்மையோடு நிலைத்து நின்ற பரம் பொருளாக விளங்குபவராகிய வீரட்டானேசுவரருடைய செல்வத்தைப் போன்ற நிரம்பிய திருவருளைப் பெற்றுக் கொண்ட சிறப்பை உடையவராகிய அந்த மருணிக்கியார் முன்னால் தம்மிடம் நிலைபெற்றிருந்த தெளிவிை ாலும் மயக்கத்தினாலும் எல்லாத் தேவர்களுக்கும் முதல் தேவனா கிய அந்த வீரட்டானேசுவரனுடைய கருணையாகிய சமுத் திரத்தில் அவர் முழுகினார். பாடல் வருமாறு: -