பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 113

போக்கிக் கொள்ளும் பொருட்டு. கூற்றாயினவாறு விலக் சகிலிர் என-கூற்றாயினவாறு விலக்ககிலீர் என்று தொடங் கும். என:இடைக்குறை. நீடிய-நீளமாகிய, கோது-ஒரு குற். றமும்; என்றது சொற்குற்றம்,பொருட்குற்றம் என்பவற்றை. இல்-இல்லாத. திருப்பதிகம்-ஒரு திருப்பதிகத்தை. போற் றால் பாடி வாழ்த்தியதால். உலகு-உலகங்கள்: ஒருமை பன்மை மயக்கம். ஏழில்-ஏழிலும் வாழும் மக்களுக்கு; இட ஆகு பெயர். வரும்-உண்டாகி வரும். துயரும்-துயரங்களும்: ஒருமை பன்மை மயக்கம், போமாறு-அகலும் வண்ணம். எதிர்-அந்த வீரட்டானே சுவரருடைய சந்நிதியில் நின்றுநின்றுகொண்டு. புகன்றனர்-அந்த மருணிக்கியார் பாடியருளி னார். ஆல்:ஈற்றசை நிலை. அவ்வாறு மருணிக்கியார் பாடி யருளிய திருப்பதிகத்தில் வரும் முதற் பாசுரம் வருமாறு: இது கொல்லிப் பண் அமைந்தது. - -

கூற்றாயின வாறு விலக்ககிலிர்

கொடுமைபல செய்தன நானறியேன் ஏற்றாயடிக் கேயிரவும் பகலும்

பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே

குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன்.அடி யேன் அதி கைக்கெடில . வீரட்டா னத்துறை அம்மானே.” அந்தத் திருப்பதிகத்தில் வரும் இறுதிப் பாசுரம் வருமாறு:

"போர்த்தா பங்கொர்ஆனையின்சருரிதோல் -

புறங்காடரங் கா நட மாடவல்லாய் ஆர்த்தாரைக் கன்றனை மால்வரைக்கீழ் . . . . அடர்த்திட்டருள் செய்த அதுச்ருதாய்

வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்என் .’ “

வேதனை யான விலக்கியிட்ாய் . ஆர்த்தார்புனல் சூழதி கைக்கெடில

விரட்டா னத்துறை அம்மானே."