பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 129

திருமேனி. உற-தரையில் படிய. ஏ:ஈற்றசைநிலை. வணங் கினர்-வீரட்டானே சுவரரைத் திருநாவுக்கரசு நாயனார் பணிந்தார்.

திருநாவுக்கரசு நாயனார் பாடி யருளிய திருப்பதிகங் களிற் பெரும்பாலும் இறுதிப் டாசுரத்தில் இராவணனைப் பற்றிய செய்தியை வைத்துப் பாடியுள்ளார். உதாரணம்

வருமாறு: -

' நரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை உரங்க ளெல்லாங் கொண்

டெடுத்தான் ஒன்பதும் ஒன்றும்அலற வரங்கள் கொடுத்தருள் செய்வான்

வளர்பொழில் வீரட்டம் சூழ்ந்து நிரம்பு கெடிலப் புனலும் -

உடையார் ஒருவர் தமர்நாம் அஞ்சுவ தியாதொன்றுமில்லை; அஞ்ச வருவதும் இல்லை." - " பையஞ் சுடர்விடு நாசப்

பள்ளிகொள் வான் உள்ளத் தானும் கையஞ்சு நான்குடை யானைக்

காலவிர லாலடர்த் தானும் பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப்

புகழ்புரிந் தார்க்கருள் செய்யும் ஐயஞ்சின் அப்புறத் தானும் : ஆரூர் அமர்ந்த அம் மானே.” பிறகு வரும் 16-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

பக்தர்கள் புகழும் கருணையை வழங்கும் பெரியவ னாகிய விரட்டானேசுவரன் தன்னுடைய திருவருளை வழங் கத் தாங்களே மயிர்களைப் பிடுங்கிக் கொள்ளும் பொலி வற்ற தலைகளை உடைய சமணத் துறவிகளினுடைய சமணசமய வழி பாழாகுமாறு. திருவதிகை வீரட்டானத் . திற்கு எழுந்தருளித் திருநாவுக்கரசு நாயனார். இந்தத்