பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 . பெரிய புராண விளக்கம்-6

வதிகை வீரட்டானத்தில் வீரட்டானேசுவரர் வழங்கிய திரு. வருளைப் பெற்றுக் கொண்டதனால் இந்தப் பூ மண்டலத் தில் வாழும் மக்கள் உஜ்ஜீவனத்தை அடைந்தார்கள்' என்று சிவபெருமானுடைய அடியவர்கள் தம்முடைய பக்கத்தைச் சுற்றி வரும் திருவதிகை விரட்டானம் என்னும் சிவத் தலத் தில் மு. சமும், படகமும், உடுக்கும். மத்தளமும், யாழும், முழவமும், புல்லாங்குழலும், துந்து பி வாத்தியமும், அடிக் கும் மணியோடு வரிசையான சங்க வாத்தியங்களை ஊது பவர்கள் ஊதும் முழக்கமும், எல்லா இடங்களிலும் முழக் கத்தை எழுப்புவதால் ஆழமான பெரிய சமுத்திரம் என்று கூறுமாறு அந்தத் திருவதிகை வீரட்டானம் எல்லாவற்றின் முழக்கங்களும் நிரம்பியிருக்கிறது. டாடல் வருமாறு:

பரசும்கரு னைப்பெரி யோன்அருளப்

பறிபுன்றலை யோர்நெறி பாழ்படவங் தரசிங்கருள் பெற்றுல குய்ந்தெனா

அடியார்புடை சூழதி கைப்பதிதான் முரசம்பட கம்துடி தண்ணுமையாழ்

முழவம்கிளை துங்துபி கண்டையுடன் கிரைசங் கொலிஎங்கும் முழங்குதலால்

நெடுமாகடல் என்ன நிறைந்துளதே.'

பரசும்.பக்தர்கள் பு க ழு ம். கருணை-கருணையை: வழங்கும். ப்:சந்தி. பெரியோன்-பெருமையைப் பெற்றவ னாகிய வீரட்டானேசுவரன். அருள-தன்னுடைய திரு. வருளை வழங்க. ப்:சந்தி. பறி-தாங்களே மயிர்களைப் பிடுங்கிக் கொள்ளும்; இதை உலோச்சு என்பர். புன்பெ. விவற்ற. தலையோர்-தலைகளை உடைய சமணத் துறவிகளினுடைய ஒருமை பன்மை மயக்கம். தலை:ஒருமை பன்மை மயக்கம். நெறி-சமண சமய வழி. பாழ்பட. பாழாகுமாறு. வந்து-திருவதிகை வீரட்டானத்திற்கு எழுந் தருளி. அரசு-திருநாவுக்கரசு நாயனார்; திணை மயக்கம், இங்கு-இந்தத் திருவதிகை வீரட்டானத்தில். அருள்-வீரட் டிரனேசுவரர் வழங்கிய திருவருளை. பெற்று-பெற்றுக்