பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 . பெரிய புரான விளக்கம்-5

சமயங்களைச் சார்ந்தவர்களால் நிலையாக விளங்கும் நிலை மையையும் அடைந்த இந்தச் சமண சமய வழி இனிமேல் அழிந்துவிட்டது ' என வருத்தத்தை அடைந்து, 'கொல்லு தலையும் பொய்களைப் பேசும் தன்மையையும் யாம் பெற்றி லோம்' என்று கூறிக் கொண்டு கொடுமையாகிய செயல் களையே செய்துவருபவர்களாகிய சமணர்கள் தங்களுடைய தலைகளும், தாங்கள் தங்களுடைய கைகளில் தாங்கள் செல் லும் வழியைப் பெருக்குவதற்காக வைத்திருந்த மயிற் பீலி களும் தாழ்வை அடையுமாறு வந்து ஒரு பக்கத்தை அந்தச் சமணர்கள் அடைந்தார்கள். பாடல் வருமாறு:

' மலையும் பல்சம பங்களும் வென்றுமற் றவரால் நிலையும் பெற்றஇந் நெறிஇனி

அழிந்த தென் றழுங்கிக் கொலையும் பொய்ம்மையும் இல'மென்று

கொடுமையே புரிவோர் தலையும் பீலியும் தாழவந்

தொருசிறை சார்ந்தார்.' மலையும்-நம்மோடு எதிர்த்து வாதாடிப் போர் புரியும்; வாதப் போரைப் புரியும். பல்-பல. சமயங்களும்-சமயங் களைச் சார்ந்தவர்களையும்; இட ஆகு பெயர். வென்றுவென்றுவிட்டு. அ ந் த ச் சமயங்களாவன: சைவ சமயம், வைணவ சமயம், சாக்த சமயம், பெளத்த சமயம், செளர சமயம் என்பவை, மற்று: அசை நிலை. அவரால்-அந்தச் சமயங்களை. சார்ந்திருப்பவர்களால்; ஒருமை பன்மை மயக்கம். நிலையும்-நிலைபெற்று விளங்கும் நிலையையும். பெற்ற-அடைந்த இந்நெறி-இந்தச் சமண சமய வழி. இனிஇனிமேல். அழிந்தது-அழிந்துவிட்டது. எ ன் று - எ ன. அழுங்கி-அந்தச் சமணர்கள் வருத்தத்தை அடைந்துக்:சந்தி. கொலையும்.கொலை செய்வதையும். பொய்ம்மையும்.பொய் -