பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 13

பன்மை மயக்கம். விருந்து-வாழும் மக்கள் வரவேற்று உணவைப் படைக்கும் விருந்தினர்களைக் காணலாம் திணை மயக்கம், ,

பின்பு வரும் 5-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருவாய்மூரில் வாழும் தாழ்த்தப் பெற்றகுலமக் களாகிய பள்ளர்கள் நெருங்கியிருக்கும் வயல்களில் வெட்டிய கரும்புகளினுடைய துண்டுகள் சொரியும் கொழுமையாகிய சாறு அந்தக் கரும்புச் செடிகளினுடைய நடுப் பக்கங்களில் வைதத் தேன் கூடுகளிலிருந்து இழிவதனால் இறங்கி வழியும் தேனாகிய வெள்ளத்தோடு பக்கங்களில் பரவி ஓடி வண்டுகள் மொய்த்துக்கொண்டு ரிங்காரம் புரியப் புதிய நீரைப் போல ஒடி வயல்களில் உள்ள மடைகளை உடைக்க, அவ்வாறு உடைந்த மடைகளை, அந்தக் கரும்புகளை ஆலையில் பிழிந்து கொப்பரையில் இட்டுக் காய்ச்சி எடுத்த வெல்லக் கட்டிகளால் ஒவ்வோர் ஊர்தனிலும் அடைப்பார்கள்." பாடல் வருமாறு:

' கடைஞர்மிடை வயற்குறைத்த

கரும்புகுறை பொழிகொழுஞ்சா றிடைதொடுத்த தேன்கிழிய

இழிந்தொழுகு நீத்தமுடன் புடைபரந்து சூதிமிறொலிப்பப்

புதுப்புனல்போல் மடையுடைப்ப உடைமடையக் கரும்படுகட்

டியினடைப்ப ஊர்கள்தொறும்.” கடைஞர்-அந்தத் திருவாய்மூரில் வாழும் தாழ்த்தப் பெற்ற குலமக்களாகிய பள்ளர்கள்; ஒருமை பன்மை மயக்கம். மிடை-நெருங்கியிருக்கும். வயல்-வயல்களில்; ஒருமை பன்மை மயக்கம். குறைத்த-வெட்டிய, கரும்பு-கரும்புகளினுடைய ே ஒரும்ை பன்மை மயக்கம். குறை-துண்டுகள்; ஒருமை பன்மை மயக்கம். பொழி-சொரியும். கொழும்சாறு-கொழுமை