பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

FA4 பெரியபுராண விளக்கம்- 6. தாங்கள் வந்த காரீயத்தைக் கறுபவர்களானார்கள்: ஒருமை பன்மை மயக்கம். - ... " - *

பிறகு உள்ள 86-ஆம் கவியின் கருத்து வருமாறு:

சமணத் துறவிகள் யாவரும் தங்களுடைய உள்ளங். களில் கவலையை உடையவர்சளாகி மிகவும் வருத்தத்தை அடைந்து துவசம் அசைந்து ஆடும் அரண்மனையின் முன்பு உள்ள அழகிய வாசற் பக்கத்தை அடைந்தார்கள்’’ என்று அந்த வாயில் காவலர்கள் இயம்ப, வடித்த நீண்ட வேலா யுதத்தை ஏந்தியிருக்கும் அந்தப் பல்லவ வேந்தனும் அந்தா சமணர்களுடைய சார்பைப் பெற்றவன் ஆகையினால் வேக மாக அடைபவனாகி, அந்தத் துறவிகளுக்கு வந்த துன்பம் என்ன?' என்று கவலையை அடைந்து கேட்டான். பாடல் வருமாறு: - -

அடிகண்மார் எல்லாரும்

ஆகுலமாய் மிகஅழிந்து கொடிநுடங்கு திருவாயிற்

புறத்தணைந்தார்’ எனக்கூற வடிநெடுவேல் மன்னவனும் மற்றவர்சார் பாதலினால் கடிதணைவான், அவர்க்குற்ற - தென்கொல்?"எனக் கவன்றுரைத்தான்.' 3: அடிகள்மார்-சமணத் துறவிகள். எல்லாரும்-யாவரும். ஆகுலமாய்-தங்களுடைய உள்ளங்களில் கவலையை உடைய வர்களாகி; திணை மயக்கம். மிக-மிகவும். அழிந்து-வகுத் தித்தை அடைந்து கொடி-துவசம். நுடங்கு அசைந்து ஆடும். திரு-அழகிய வாயில்-அரண்மனையின் முன்னால் உள்ள வாசலினுடைய புறத் து-பக்கத்தை. அணைந்தார்அடைந்தார்கள்: ஒருமை பன்மை மயக்கம். என-என்று: இடைக்குறை. க்சந்தி. கூற அந்த வாயில் காவலர்கள் பல்லவ மன்னனிடம் சொல்ல. வடி-வடித்த. நெடு-நீள மாகிய. வேல்-வேலாயுதத்தை . ஏந்தியிருக்கும். மன்னவ