பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - t43

கூற, சமயத்தைத் தெரித்து கொண்டு அரண்மனைக்குள் புகுந்து அந்த வாயில் காவலர்களும் தங்களுடைய அரச னாகிய பல்லவனிடம் கூறுவாரானார்கள்." பாடல் வரு மாறு:

.. உடைஒ ழிந்தொரு பேச்சிடை

யின்றிகின் றுண்போர் கடைஅ ணைந்தவன் வாயில்கா

வலருக்கு. நாங்கள் அடைய வங்தமை அரசனுக் கறிவியும்' என்ன இடைஅ றிந்துடிக் கவரும் தம் இறைவனுக் கிசைப்பார்." உடை-தாங்கள் உடுத்துக் கொள்ளும் ஆடைகளை: ஒருமை பன்மை மயக்கம். ஒழிந்து-விட்டு விட்டு. ஒரு பேச்சுஒருபேச்சும். இடை-நடுவில். இன்றி-பேசுதல் இல்லாமல். நின்று-நின்று கொண்டே. உண்போர்-உணவுகளை உண்ப வர்களாகிய அந்தச் சமணர்கள்; ஒருமை பன்மை மயக்கம். கடை-அந்தப் பல்லவ மன்னனுடைய அரண்மனையின் வாசலை அணைந்து-அடைந்து. அவன்-அந்த மன்னனு டைய வாயில்-அரண்மனை வாசலை. காவலருக்கு-காவல் புரிந்துகொண்டு நிற்கும் வாயில் காவலர்களிடம்: ஒருமை பன்மை மயக்கம்; உருபு மயக்கம். நாங்கள்-யாங்கள். அடைய-யாவரும் சேர்ந்துகொண்டு. வந்தமை - வந்த <5)t.BGð) tL}. அரசனுக்கு-உங்களுடைய மன்னனாகிய பல்லவ ளிைடம்; உருபு மயக்கம். அறிவியும்-தெரிவிப்பீர்களாக என்ன-என்று வந்த சமணர்கள் கூற. இடை-சமயத்தை. அறிந்து - தெரிந்துகொண்டு. புக்கு - அரண்மனைக்குள் நுழைந்து. அவரும்-அந்த வாயில் காவலர்களும் ஒருமை பன்மை மயக்கம். தம்-தங்களுடைய. இறைவனுக்குஅரசனாகிய பல்லவனிடம்; உருபு மயக்கம், இசைப்பார்