பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j42 - பெரிய புராண விளக்கம்-8

சொன்ன வண்ணமே செய்வது

துணிந்ததுன் மதியோர் முன்னம் நாம்சென்று முறைப்படு

வோம்' என முயன்றே இன்ன தன்மையில் இருட்குழாம்

செல்வது போல மன்ன னாகிய பல்லவன்

நகரில்வங் தணைந்தார். ' சொன்ன-தாங்கள் அவ்வாறு கூறி . வண்ணமே:படியே செய்வது-புரிவதற்கு. துணிந்த-துணிவை அடைந்த. துன்மதியோர்-கெட்ட அறிவைப் பெற்றவர்களாகிய அந்தச் சமணர்கள்; ஒருமை பன்மை மயக்கம். முன்னம்-முன் கூட்டியே. நாம்-யாம். சென்று-போய். முறைப்படுவோம்அரசனிடத்தில் முறையிடுவோம். என-என்று; இடைக் குறை. முயன்று-முயற்சியைச் செய்து.ஏ:அச்ைநிலை.இன்னஇத்தகைய, தன்மையில்-பான்மையோடு; உருபு மயக்கம். இருள்-இருட்டினுடைய. குழாம்-கூட்டம். செல்வதுபோலபோவதைப் போல. மன்னன் ஆகிய-தங்களுடைய வேந்த னாகிய, பல்லவன்-பல்லவன் அரசாட்சி புரியும். நகரில். நகரத்திற்கு உருபு மயக்கம். வந்து-போய். அணைந்தார்அந்தச் சமணர்கள் சேர்ந்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம். - r

பிறகு வரும் 85-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: . . . . :த்ாங்கள் உடுத்துக் கொள்ளும் ஆடைகளை விட்டு х விட்டு ஒரு பேச்சும் நடுவில் பேசுதல் இல்லாமல் நின்று கொண்டே உண்பவர்களாகிய அந்த்ச் சமணர்கள் அந்தப் பல்லவ மன்னனுடைய அரண்மனையினுடைய வாசலை அடைந்து அந்த மன்னனுடைய அரண்மனை வாசலைக் காவல் புரிந்துகொண்டு நிற்கும் வாயில் காவலர்களிடம், . urisರ್ಿ யாவரும் வந்தமையை உங்களுடைய பல்லவ மன்னனிடம் தெரிவிப்பீர்களாக என்று வந்த சமணர்கள்