பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 149

புரியா-செய்யாத நிலை-நிலைமையை. கொண்டு-மேற் கொண்டு. பொய்-பொய்யாது. ஒழுகும்-நடந்து வரும். அமண்-சமணர்களாகிய திணை மயக்கம்; ஒருமை பன்மை மயக்கம். குண்டர்-இழிந்தவர்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

உரைத்தார்-கூறினார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு வரும் 99-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'சிவபெருமானுடைய திருவருளைப் பெற்றுக்கொண்ட உணர்ச்சி இல்லாமல் சைவசமய வழியிலிருந்து விலகி இது தான் நல்ல அறிவையுடைய சமயம் என்று எண்ணிக் கொண்டு மயக்கத்தைக் கொண்ட அந்தப் பல்லவ வேந் தனும் தன்னுடைய அமைச்சர்களைப் பார்த்து, 'தெளிவைப் பெற்ற அறிவைக் கொண்டவர்களாகிய இந்தத் துறவிகள் கூறிய கெட்டவனாகிய தருமசேனனைத் தண்டிப்பதற்காக கையூட்டாகிய செல்வத்தைப் பெற்றுக்கொண்டு விட்டு விடாமல் என்னிடம் அழைத்துக்கொண்டு வருவீர்களாக' என்று கூறினான். பாடல் வருமாறு: ' அருள்கொண்ட உணர்வின்றி

நெறிகோடி அறிவென்று மருள்கொண்ட மன்னவனும்

மந்திரிகள் தமைநோக்கித் தெருள்கொண்டோர் இவர்சொன்ன்

தீயோனைச் செறுவதற்குப் பொருள்கொண்டு விடாதென்பால் - கொடுவாரும்." எனப்புகன்றான்.' அருள் - சிவபெருமானுடைய கொண்ட பெற்றுக் கொண்ட, உணர்வு-உணர்ச்சி. இன்றி-இல்லாமல். நெறிசைவசமய வழியிலிருந்து. கோடி-விலகி. அறிவு-இதுதான் நல்ல அறிவை உடைய சமயம்: ஆகுபெயர். என்று-என எண்ணிக்கொண்டு. மருள்-மயக்கத்தை. கொண்ட-பெற்ற. மன்னவனும்-அந்தப் பல்லவ வேத்தனும் மந்திரிகள் தமை.

தி-10