பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 157

சொல்லும்' என அறத்துறந்து

தமக்குறுதி அறியாத புல்லறிவோர் அஞ்சாது

கீற்றறையில் இடப்புகன்றார்.” பல்லவனும்-அந்தப் பல்லவ மன்னனும். அதுகேட்டுதிருநாவுக்கரசு நாயனார் வரமாட்டேன் என்று திருவாய் மலர்ந்தருளிய அந்த வார்த்தைகளைக் கேட்டுவிட்டு. அது: ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பாங்கு-தன் பக்கத்தில். இருந்த-அமர்ந்து கொண்டிருந்த பாய்-பாய்களாகிய ஒருமை பன்மை மயக்கம். உடுக்கை-ஆடைகளை உடுத்துக் கொண்டிருந்த ஒருமை பன்மை மயக்கம். வல்-வலிமையைப் பெற்ற. அமணர்தமை-சமணர்களை ஒருமை பன்மை மயக் கம். தமை: இடைக்குறை. தம்:அசைநிலை. நோக்கிபார்த்து. மற்று: அசைநிலை. அவனை-அந்தத் தரும் சேைைன. ச் சந்தி. செய்வது இனி-இனிமேல் செய்ய வேண்டிய காரியத்தை. ச்:சந்தி. சொல்லும்-நீங்கள் கூறு வீர்களாக. என-என்று கூறவே; இடைக்குறை. அற. எல்லாவற்றையும் அடங்கத்:சந்தி. துறந்து-துறந்துவிட்டு: தமக்கு-தங்களுக்கு. உறுதி-உறுதிப் பொருள். அறியாதஇன்னதென்று தெரிந்து கொள்ளாத. புல்-பொலிவற்ற. அறிவோர்-அறிவை உடைய சமணர்கள்; ஒருமை பன்மை மயக்கம். அஞ்சாது-சிறிதேனும் பயத்தை அடையாமல், நீற்றறையில்-சுண்ணாம்புக் காளவாயில். இட-அந்தத் திரு 'நாவுக்கரசு நாயனாரை இடுமாறு. ப்:சந்தி. . புகன்றார்

கூறினார்கள், ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு வரும் 96-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: -

தன்னுடைய பக்கத்தில் வந்து சேர்ந்தவர்களைப் பார்த்து, அவ்வாறே நீங்கள் செய்வீர்களாக' என்று பெருகி மூண்ட சினத்தைக் கொண்டகொடுங்கோலன் ஆகிய அந்தப் பல்லவ மன்னன் கூறியவுடன் பெருமையையும் தகுதி யையும் பெற்றவராகிய திருநாவுக்கரசு நாயனாரை உருகு