பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பெரிய புராண விளக்கம்-ன்

ருடைய திருத்தொண்டர்-திருத் தொண்டராகிய அந்த நாயனார். ஈண்டு-இந்தத் திருவதிகை வீரட்டானத்தில். வரும்-அடியேனுக்கு உண்டாகி வரும். வினைகளுக்கு-திய வினைகளைப் போக்கியருளுவதற்கு வினைகள்-துன்பங்கள். எம்-அடியேங்களுடைய. இது திருநாவுக்கரசு நாயனார் தம்மையும் தம்முடைய தமக்கையாராகிய திலகவதியாரை யும் சேர்த்துக் கூறியது. பிரான்-தலைவனாகிய வீரட்டா னேசுவரன். உளன்-இருக்கிறான்; இடைக்குறை. என்று. என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு. இசைந்துசம்மதித்து. இருந்தார். திலகவதியாருடைய திருமடத்தல் தங்கிக் கொண்டிருந்தார். மூண்டசின-கோபம் மூண்டு எழுந்த, ப்:சந்தி. போர்-யுத்தம் புரியும். மன்னன்-அந்தப் பல்லவ வேந்தனுக்கு. முன்-முன்னால் அணைந்து-சென்று. அங்கு-அந்த அரண்மனையில். அறிவித்தார்-இந்தச் செய்தி யைத் தெரிவித்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

அடுத்து வரும் 95-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்தப் பல்லவ மன்னனும் அந்தச் செய்தியைக் கேட்டு: விட்டுத் தன்னுடைய பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்த பாய்களாகிய ஆடைகளை உடுத்துக் கொண்டிருந்த வலி , மையைப் பெற்ற சமணர்களைப் பார்த்து, அந்தத் தரும சேன்னைச் செய்ய வேண்டிய காரியத்தை இனிமேல் நீங்கள் கூறுவீர்களாக' என்று கூறவே, எல்லாவற்றையும் அடங்கத் துறந்துவிட்டுத் தங்களுக்கு உறுதிப் பொருள் இன்னதென்று தெரிந்து கொள்ளாத பொலிவற்ற அறிவை உடைய -சமணர்கள் சிறிதேனும் பயத்தை அடையாமல் சுண்ணாம்புக் காளவாயில் அந்தத் திருநாவுக்கரசு நாயனாரை இடுமாறு கறினார்கள். பாடல் வருமாறு: ' -

'பல்லவனும் அதுகேட்டும்

பாங்கிருந்த பாயுடுக்கை வல்லமணர்தமைகோக்கி,

மற்றவனைச் செய்வதினிச்